அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்துச் செய்து சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வரவேற்றுள்ளார்.
இந்த முடிவு அனோஜன் சிவராசாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அத்துடன் மிகுந்த அக்கறையுடன் இவ்வழக்கைக் கவனித்து வந்த இலங்கையர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொறுமையான இராஜதந்திர அணுகுமுறை, நட்பு நாட்டின் சட்ட நடைமுறைகளை மதித்தல்,இலங்கை நாட்டவருக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களின் அயராத முயற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த முடிவு பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
இதில் பங்காற்றிய சவூதி அரேபிய, இலங்கை இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள்,சட்டக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.
எஞ்சிய சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அனோஜன் சிவராசாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
“வாழ்வாதாரத்தைத் தேடி நம் நாட்டை விட்டுச் செல்லும் எந்தவோர் இலங்கையரும் ஒருபோதும் தாங்கள் தனித்து விடப்பட்டதாக உணரக்கூடாது,” என்று ஜனாதிபதி கூறினார்.
வெளிநாடுகளில் சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கை நாட்டவர்களுக்கு ஆதரவளிப்பதில் அரசாங்கத்திற்கு உள்ள அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதியளித்தார்.
கௌசல்யா
