வத்தேகமை/கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் நவராத்திரி விழாவின் நிறைவு நாள் பூஜைகளும் கலைநிகழ்ச்சிகளுபாடசாலையின் அதிபர் சுமன் இராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளை பாடசாலையின் இந்து மாமன்றம் ஒழுங்கமைத்தது. கலைநிகழ்ச்சிகளை பாடசாலையில் பணியாற்றும் இஸ்லாம், கிறிஸ்தவ, பெளத்த ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினார்கள்.



பாடசாலையின் வளாகத்தில் சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட சரஸ்வதி தேவியின் திரு உருவச்சிலை சகோதர மொழி ஆசிரியரால் புனருத்தாரணம்செய்து குடமுழுக்கு வைபவமும் இடம்பெற்றமை இவ்வருட நவராத்திரி காலப்பகுதியைப் பூரணப்படுத்தியது.
பூஜை நிகழ்வுகளில் பூசகராகப் பாடசாலையில் உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவன் ஹம்சப்பிரியன் சர்மா பணியாற்றினார். இது பாடசாலையின் மனிதவளங்களை வினைத்திறன் மிக்கதாகப் பயன்படுத்திக்கொள்கின்றமையை பறைசாற்றியது.
இவ்வருட நவராத்திரி பூஜையின் போது பெற்றோர், பழையமாணவர் சங்கத்தின் உதவியும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உதவியும் ஏனைய நலன் விரும்பிகளின் உதவியும் கிடைக்கப்பெற்றமை,பாடசாலையின் மீது அக்கறையுள்ளசமூகத்தின் மீள்வருகையை உறுதிப்படுத்தியதாக அதிபர் குறிப்பிடுகின்றார்.
