‘ஜனவரமே புரவெசியோ’ (மக்களாணையின் குடிமக்கள்) அரசாங்கத்திற்கு ஆதரவாக இன்று (17) எழுச்சிப் பேரணியொன்றை நடத்தினர்.
‘திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு எதிரான சதித்திட்டங்களை முறியடிப்போம்’ என்ற எழுச்சி முழக்கத்துடன் இந்தப் பேரணி ஜனாதிபதி செயலகம் வரை சென்றது.
ஆரம்பத்தில் கொழும்பு கோட்டைப் பகுதியில் ஒன்றுகூடிய இந்த அமைப்பினரும் பொதுமக்களும், அங்கிருந்து காலி முகத்திடல் ஊடாக ஜனாதிபதி செயலகம் நோக்கிச் சென்றனர்.
