ஜூலை 4 முதல் பஸ் கட்டணம் 0.55 வீதத்தால் குறையும் என்று போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 0.55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள் விலையைச் சரிசெய்த பிறகு புதிய பேருந்து கட்டண திருத்தத்தை 0.55% குறைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தத் திருத்தமும் இருக்காது என்றும் ஆணைக்குழு கூறுகிறது.
Author: Malaikuruvi
இனவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டேன்
இனவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் அதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதற்கு இந்த நாட்டின் மகா சங்கத்தினர் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். கல்னேவா மகாவலி மைதானத்தில் நேற்று (30) நடைபெற்ற இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று ஜனாதிபதி உரையாற்றினார்.. உடல் ரீதியாக எட்ட வேண்டிய வெற்றிகள் போன்றே ஆன்மீக ரீதியாகவும் அடைய வேண்டிய பல சாதனைகள் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட காலமாக இரக்கம், கருணை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட தர்மத்தைப் போதித்து, அந்த தர்மத்தை…
கஹவத்தையில் இருவரைக் கடத்திச்சென்று துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் (27) காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் 22 வயதுடையவர் என்றும் மற்றையவர் 27 வயதுடையவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பஸ் கட்டணம் இன்று குறைக்கப்படமாட்டாது
பஸ் கட்டணம் இன்று குறைக்கப்படமாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாள்களுக்குள் தீர்மானிக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுக்க ஆணைக்குழு விரைவில் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயோமி ஜெயவர்தன குறிப்பிட்டார். முன்பு திட்டமிட்டவாறு, வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் ஜூலை முதலாம திகதி முதல் அமலுக்கு வர வேண்டியிருந்தது. எனினும், எரிபொருள் விலை மாற்றத்தின் காரணமாக அஃது இன்று அமலில் வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பராட்டே சட்டத்தை இடைநிறுத்துமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள பராட்டே சட்டத்தை இடைநிறுத்துமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நள்ளிரவுக்குப் பின்னர் பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளமையினால் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். இன்று முதல் இந்த தரப்பினரின் சொத்துக்கள் கடன் நிலுவையின் காரணமாக ஏலம் விடப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கும் குறித்த தரப்பினரின் பங்களிப்பு குறைவடையும். அத்துடன், சுமார் 4 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, பரேட் சட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்குக் கடன் மறுசீரமைப்பு, வட்டி சலுகைகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்…
டிரம்ப் எதிர்பார்த்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்
தற்போதைய நீதிமன்ற விசாரணைப் பருவத்தின் கடைசி நாளில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு அவர் எதிர்பார்த்த வெற்றியைத் தந்துள்ளது. அதன்படி, அமெரிக்க அதிபரின் அதிகார வரம்பை பயன்படுத்திப் பார்க்கும் விதமாக அவர் தனக்கென வகுத்துள்ள சர்ச்சைக்குரிய, பரந்த அடிப்படையிலான திட்டங்களை அமல்படுத்துவது அவருக்கு எளிதாகியுள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஆறு பழமைவாதப் போக்குடைய நீதிபதிகள் அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க மூன்று தாராளவாத நீதிபதிகள் அதற்கு எதிராக மாற்றுக் கருத்துத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு அதிபரின் கொள்கைகளைத் தடுக்கும் நீதிபதிகளின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது. இதனால், நீதித் துறைக்கும் அதிபருக்கும் இடையிலான அதிகார வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க கூட்டரசு நீதிபதிகள் மூவர் ஜனவரி மாதம் பிறப்பை வைத்து குடியுரிமை பெறுவதற்கு வரம்பு விதித்த அதிபரின் நிர்வாக…
தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கரண்டியைக் கையிலெடுத்த அமைச்சர்கள்
இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கரண்டியைக் கையிலெடுத்த அமைச்சர்கள் பண்டாரவளை கபரகலை தோட்டத்தில் வரலாறு படைத்துள்ளனர். இதுநாள் வரை மலையகம் கண்டிராத அரசியல் மாற்றம் இது என்கிறார்கள் நெட்டிசன்கள். மண்சரிவில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த பூனாகலை – கபரகலை தோட்ட மக்கள் செயலிழந்துள்ள மாக்கந்தை தேயிலைத் தொழிற்சாலையில் கடந்த ஆட்சியாளர்களால் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எவ்வித வசதிகளுமற்ற அந்த அகதி முகாமில் நாதியற்றவர்களாகப் பாதிக்கப்பட்டவர்கள் கைவிடப்பட்டிருந்த மக்களுடன் மாபெரும் இந்த சிரமதானப் பணியில், பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், அம்பிகா செமுவேல், ரவீந்திர பண்டார ஆகியோரும் இணைந்து கொண்டனர். அத்துடன், இலங்கை இராணுவத்தினர், ஓய்வு பெற்ற முப்படையினர், அரச உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என்று பலரும் இச்சிரமதானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
200 வருடம் வாழ்ந்தும் நிலவுரிமை இல்லையா? முட்டாள் அரசியல்!
இந்தியாவிலிருந்து பிழைப்பு தேடி இலங்கையின் மலைப் பிரதேசங்களுக்குத் தமிழர்கள் வந்து 200 வருடங்கள் ஆகிவிட்டதாகச் சொல்பவர்களிடம், 200 வருடம் வாழ்ந்தும் நிலவுரிமை இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது. அப்படியோர் அரசியல் செய்வார்களாயின் அது முட்டாள்தனமாக அரசியல் இல்லையா? என்றும் கேட்கத் தோன்றவில்லையா? மேற்கத்தேய நாடுகளில் ஐந்து வருடம் குடியிருந்தால், குடியுரிமை வழங்குகிறார்கள். இங்குக் காணிச் சட்டத்தில் 66ஆம் சரத்தின்படி ஒருவர் ஒரு காணியில் 66 நாட்கள் இருந்துவிட்டால், அவருக்கு அந்தக் காணியைச் சொந்தம் கொண்டாட முடியம். வீடு, மரம் உள்ளிட்ட அசையாச் கொத்துகள் இருந்தால் அது இன்னும் கூடுதல் பலம்! வாடகை வீட்டைச் சொந்மாக்கிக்கொண்ட பலர் இங்குதான் வாழ்கிறார்கள் அப்படியென்றால், 200 வருடங்களாக வாழும் ஓர் இடத்தில் இன்னும் உரிமை இல்லை என்று சொல்லிக் கோசம் எழுப்புவது வெட்கம் கெட்ட அரசியல் இலலையா? மலையகம் எங்கள் தேசம்,…
மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர் தெரிவில் குழப்பம்
மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர் தெரிவில் குழப்பம் ஏற்பட்டது. மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 இன்று பிற்பகல் 02.30 அளவில் மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது. சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பரமசிவம் ராஜ்குமார் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் சுயேட்சை குழு சார்பாக கந்தையா ராஜ்குமார், தேசிய மக்கள் சக்தி சார்பாக ஆசிர்வாதம் எலிஸ்டன் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர். தேசிய மக்கள் சக்தியில் அந்த சபைக்கு தெரிவான உறுப்பினர்கள்…
மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து மனித உரிமை ஆணையாளருடன் பேச்சு
மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால உரிமைகள், நிலமின்மை, பொருளாதார சார்பு மற்றும் நிர்வாக புறக்கணிப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரிடம் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் திரு. வோல்கர் டர்க் அவர்களை பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சந்தித்து, மலையகத் தமிழர் சமூகத்தின் வரலாற்று பாரபட்சங்கள் மற்றும் தொடரும் சமூக, பொருளாதார புறக்கணிப்புகளை வலியுறுத்தியிருந்தார். இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) சார்பில், அதன் சர்வதேச விவகாரங்களுக்கான உப தலைவர் பாரத் அருள்சாமி , உயர் ஆணையரை அவரது அதிகாரப்பூர்வ கலந்துரையாடலில் நேரில் சந்தித்து,…