ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து

ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து

ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து இன்று பகல் ஏற்பட்டது. ஹட்டன் பிரதான நகரில் தனியார் காலணி கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது . இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது . கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது, மேலும் ஹட்டன் டிக்கோயா மாநகரசபை தீயணைப்புப் பிரிவு ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காலணிகள் முற்றிலுமாக எரிந்து சேதமாகின. தீ விபத்தினால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலணிகள் எரிந்ததால் எழுந்த துர்நாற்றத்தால், பகுதிவாசிகள் சிரமப்பட்டனர். ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை…

கொழும்பில் இன்றும் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் இன்றும் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் இன்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது

நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது

யேமனில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது, அவரைத் தூக்கிலிடுவது ஒன்றே தமக்குத் தேவை என்று நிமிஷாவால் கொலையுண்டதாகக் கூறப்படுபவரின் சகோதரர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். தனது சகோதரனுக்கான இழப்பீட்டையோ வேறு எந்த நிவாரணத்தையோ பெறுவதற்குத் தமது குடும்பத்தவர்கள் தயாராக இல்லை என்று கொலையுண்டவரின் சகோதரரான அப்துல் பத்தா மஹதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பேஸ்புக் பக்கத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஒன்மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது. பிரியாவுக்கான மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது எமக்குத் தெரியாது. எவ்வாறேனும் அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் எமக்குக் கிடையாது. இதுவிடயத்தில் எந்தவித நல்லிணக்கத்திற்கோ சமரசத்திற்கோ இடம் கிடையாது. சிறிது கால இடைவெளி வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், மரண தண்டனை என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று அப்துல் பத்தா…

ஆடி மாதம் முதலாந்திகதி இன்று

ஆடி மாதம் முதலாந்திகதி இன்று

ஆடி மாதம் முதலாந்திகதி இன்று: மாதங்கள் பன்னிரெண்டு, அதில் தமிழ் மாதங்களின் நான்காவதாக வரும் ஆடி விசேட சிறப்புக்களை கொண்டது. ஆடிமாதம் முதலாம் திகதி தெட்சணாயன காலம் ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர். அயனங்கள் என்பது கதிர்நகர்வு ஆகும். தைமுதல் ஆனி வரையான காலம் உத்தராயணம் என்றும் (வடதிசை நகர்தல்) ஆடி முதல் மார்கழி வரையான காலம் தெட்சணாயனம் (தென் திசை நகர்தல்) என்றும் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் தேவர்களுக்கு பகற்பொழுதாகவும் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரையுள்ள காலம் இரவுக் காலமாகவும் கருதப்படுகின்றது. ஆடி மாதம் முதல் திகதியில் தேவர்கள் பூவுலகம் வருவதாக ஐதீகம். இதனால் தான் மக்கள் ஆடிமாதம் முதலாம் திகதியை மகிழ்வுடன் வரவேற்கிறார்கள். ஆடிமாதம் ஒரு மாதமும் சுப…

தபால்காரன் இல்லாமல் தத்தளிக்கும் கடிதங்கள்

தபால்காரன் இல்லாமல் தத்தளிக்கும் கடிதங்கள்

நேரடித் தபால்சேவை இன்மையால் அவதியுறும் மக்கள் தமக்கு அந்தச் சேவையைப் பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். கண்டி பன்விலை கலாபொக்க அரச பெருந்தோட்ட யாக்கத்தினால் நிருவகிக்கப்படும் தோட்டங்களுக்கு நேரடித் தபால் விநியோகம் இல்லை. இதனால், தோட்டப்புற மக்களும் அங்கிருக்கும் கற்ற இளைஞர் யுவதிகளும் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். தோட்டக் காரியாலயங்களில் தமக்குரிய தபால்கள் தேங்கிக்கிடப்பதாலும் உரிய நேரத்திற்கு அவசர கடிதங்களும் ஆவணங்களும் கிடைக்கப் பெறாமையாலும் காலாகாலமாக பல்வேறு வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன. இவ்வாறு முக்கியக் கடிதங்கள் தோட்டப்புற இளைஞர் யுவதிகளுக்குக் கிடைக்கப் பெறாமல் சொல்லொணா துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகப் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மடுல்கலை தபால் நிலையத்தினரால் விநியோகிக்கப்படும் கடிதங்கள், ஆவணங்களை விநியோகிப்பதற்கு நேரடித் தபால் விநியோக ஏற்பாடுகள் அங்கில்லை. இதன் காரணமாகத் தோட்ட நிர்வாகத்தால் கையேற்கப்படும் தபால்கள் பிரதான தோட்டக் காரியாலயத்தில் தேங்கிக் கிடக்கின்றன.…

பணிப்பாளர் மௌலவி ஹாசிம் பணியிலிருந்து ஓய்வு

பணிப்பாளர் பதவியிலிருந்து மௌலவி ஓய்வு

மத்திய மாகாண வத்துகாமம் கல்வி வலயத்தில் மேலதிகக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஹாசிம் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். ‪எதிர்வரும் 22.072025‬ அன்று தனது கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அவர், ‪1965 .07 .22‬ ஆம் திகதி அனுராதபுர மாவட்டம் கிரிப்பாவ என்னும் கிராமத்தில் பிறந்தார். இப்ராஹிம் அலிமா உம்மா ஆகியோருக்குப் புதல்வராக அவதரித்த இவர் ஆரம்பக் கல்வியைத் துருக்குராகம முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்றார். தொடர்ந்து இடைநிலைக் கல்வி மற்றும் மௌலவி கற்கை நெறியை மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் கற்றுப் பட்டம் பெற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் அந்தப் பல்கலைக் கழகத்திலேயே முதுமாணி பட்டத்தையும் பெற்றார். ஆரம்பக் கல்வி ஆசிரியராக 1990 ஜனவரி ஒன்றில் தான் கற்ற துருக்குராகம முஸ்லிம் வித்தியாலயத்திலேயே கடமையை ஏற்று தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்றார்.…

செம்மணிக்குள் செம்மறிகள் புகுந்ததால் கசமுசா!

செம்மணிக்குள் செம்மறிகள் புகுந்ததால் கசமுசா!

செம்மணிக்குள் செம்மறிகள் புகுந்ததால் கசமுசா! ஏற்பட்டது. கொழும்பில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போதே இந்தக் சகமுசா நிகழ்ந்துள்ளது. செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்’ எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்டோர்,’புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?, செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!, யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி, வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து’ போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள்…

இஸ்ரேல் அமைச்சரவையில் மேலுமொரு பிளவு

இஸ்ரேல் அமைச்சரவையில் மேலுமொரு பிளவு

இஸ்ரேல் அமைச்சரவையில் மேலுமொரு பிளவு ஏற்பட்டிருப்பதால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு திண்டாட்டத்தில் இருக்கிறார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அமைச்சரவையிலிருந்து மற்றோர் சமயப் பற்றுமிக்ககட்சியான ஷாஸ் விலகியுள்ளது. இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் ஷாஸ் கட்சி, அவரது கூட்டணியில் தற்போதைக்குத் தொடர்ந்து நீடிக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இதனால் கட்டாய தற்காலிக ராணுவச் சேவை விதிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைக் களைவதற்கு அரசாங்கத்திற்குக் கூடுதல் நேரம் கிடைத்துள்ளது. இதற்கு முந்திய நாளில், ஐக்கிய தோரா யூதம் என்ற சமயப் பற்றுமிக்க கட்சி, இந்த விவகாரம் தொடர்பில் திரு நெட்டன்யாகுவின் கூட்டணியிலிருந்து வெளியேறியதை அடுத்து அவருக்குத் தற்போது நாடாளுமன்ற இடத்தில் ஒரே ஒரு பெரும்பான்மை உள்ளது. இருந்தபோதும், ஷாஸ் கட்சி தற்போதைக்குக் கூட்டணியிலிருந்து விலகவில்லை எனக் கூறியுள்ளது. அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க முடியாது என்று கனத்த இதயத்துடன் ஷாஸ் முடிவுசெய்துள்ளது,”…

பௌர்ணமிக்கு போத்தல்களுடன் காத்திருந்த இளைஞர்

பௌர்ணமிக்கு போத்தல்களுடன் காத்திருந்த இளைஞர்

பௌர்ணமிக்கு போத்தல்களுடன் காத்திருந்த இளைஞர் ஒருவர் ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று லிந்துலையில் கைதுசெய்யப்பட்டார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை பகுதியில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சந்தேகத்தில் மதுபான போத்தல் ஒரு தொகையுடன் அந்த இளைஞரை நேற்று நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் போயா தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்று வருவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் அந்த நபரிடமிருந்து 30 முழுப் போத்தல்களும், 96 கள்ளு போத்தல்களும், மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை மதுபான போத்தல்கள் சகிதம் இன்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாதையில் சென்ற வான் பள்ளத்தில்: எட்டுப்பேர் காயம்

பாதையில் சென்ற வான் பள்ளத்தில்

பாதையில் சென்ற வான் பள்ளத்தில் பாய்ந்ததால் எட்டுப்பேர் காயமடைந்த சம்பவம் நுவரெலியா நானுஓயா தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து (10) காலை 5:00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், வேனின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். ஹற்றன் க. கிருஷாந்தன்