கம்பளை குடைத் தொழிற்சாலையில் தீ

கம்பளை குடைத் தொழிற்சாலையில் தீ

கம்பளை குடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (28) இரவு இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டி- நாவலப்பிட்டி வீதியில் கம்பளை நகரில் அமைந்துள்ள குடைத் தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்தினால் தொழிற்சாலைக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை- மாலைதீவு இருதரப்பு ஒப்பந்தங்கள்

இலங்கை- மாலைதீவு இருதரப்பு ஒப்பந்தங்கள்

இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது முய்சுவுக்கும் இடையிலான சந்திப்புக்குப்பின்னர் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மாலைதீவு சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டனர். நேற்றுக்காலை மாலைதீவு சென்றடைந்த ஜனாதிபதியை மாலைதீவு ஜனாதிபதி உற்சாகமாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மாலைதீவு ஜனாதிபதி மாளிகையில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.

ஊவா மாகாண பிரதம செயலாளர் நியமனம்

ஊவா மாகாண பிரதம செயலாளர் நியமனம்

ஊவா மாகாண பிரதம செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராகத் திருமதி பி. ஏ. ஜி. பெர்னாண்டோ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி பெர்னாண்டோவிற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க இன்று காலை வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு

ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது முய்சு தலைமையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அங்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் அங்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதிவரை அங்குத் தங்கியிருப்பார்.

ஜனாதிபதி அனுர மாலைதீவு சென்றார்

ஜனாதிபதி அனுர மாலைதீவு சென்றார்

ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) காலை மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்குப் பயணமானார். மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பார். இந்த விஜயத்தின்போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள். இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளன. இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு இவ்வருடத்துடன் 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் தருணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத், சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரும் இணைந்துள்ளனர்.

ஹற்றன் செல்லாமல் கால்வாயில் கவிழ்ந்த ஓட்டோ

ஹற்றன் செல்லாமல் கால்வாயில் கவிழ்ந்த ஓட்டோ

ஹற்றன் செல்லாமல் கால்வாயில் கவிழ்ந்த ஓட்டோ ஒன்று கொட்டகலை கமர்ஷல பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து ஹட்டன் நகர் நோக்கி சென்ற முச்சக்கவண்டி கொட்டகலை பகுதியில் வீதியை விட்டு விலகிக் கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நேற்று (27) பிற்பகல் 1:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டியின் முன் சக்கரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டுப் பிரதான வீதியின் குறுக்கே கவிழ்ந்து கால்வாய்குள் விழுந்ததாகத் தெரிவித்தனர். இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது. க. கிருஷாந்தன்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மேற்கிலிருந்து தென்மேற்கு நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், கற்பிட்டி முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை முதல் வாகரை வரையிலும் உள்ள…

திருமணத்திற்குச் செல்லவிருந்த பிள்ளை ஆற்றில் வீழ்ந்து மரணம்

திருமணத்திற்குச் செல்லவிருந்த பிள்ளை ஆற்றில் வீழ்ந்து மரணம்

திருமணத்திற்குச் செல்லவிருந்த பிள்ளை ஆற்றில் வீழ்ந்து மரணம் அடைந்த சம்பவமொன்று கொட்டகலைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்திச் செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த நான்கு வயது பிள்ளையே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்லவிருந்த நிலையில், தனது மகளை தயார் நிலையில் வைத்து விட்டுப் பிள்ளையின் தாய் தயாராகி கொண்டிருந்த வேளை, பிள்ளை வீட்டின் அருகிலிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (26)) இடம்பெற்றுள்ளது. பின்னர் பிள்ளையைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார், பொதுமக்கள் இணைந்து ஈடுபட்ட போது சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட பிள்ளை சடலமாக மீட்கப்பட்டுக் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகப்…

மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

புகழ்பூத்த மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார். தனது 71 வயதில் இன்று அதிகாலை அமெரிக்காவில் மாரடைப்பால் அவர் காலமானார். டெரி ஜீன் பொலியா என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், ஹல்க் ஹோகன் என்று பிரபல்யம் பெற்றவர். ஹல்க்கின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தயாரட்ன காலமானார்

முன்னாள் அமைச்சர் தயாரட்ன காலமானார்

ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தயாரட்ன காலமானார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பி. தயாரத்ன 89ஆவது வயதில் இன்று (25) காலை காலமானார். நீண்டகால அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த பி. தயாரத்ன, சுகாதாரம், ஊட்டச்சத்து, நலன்புரி அமைச்சராகவும் வேறு பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். தனது பணித்திறன், மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பால், பலராலும் மதிக்கப்பட்ட அரசியல்வாதியாகத் திகழ்ந்தார்.