தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், அவர் சம்பவ இடத்திலெயே உயிரிழந்ததாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் கௌசல்யா
