கொழும்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்பஸ் செல்வதற்கான முன்னுரிமைப் பாதை விதி முறைகள் இன்று (29) முதல் மீண்டும் இறுக்கமாக அமல்படுத்தப்படும் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் இன்று முதல் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இத்திட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், இன்று முதல் மேலும் 7 வழித்தடங்களில் மெட்ரோ பஸ்கள் இயக்கப்படும் என மெட்ரோ பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக 104 மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் யு.பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
