மூன்று மெட்ரிக் தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியா இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது.
இவை இந்திய விமானப்படை விமானம் மூலம் கொழும்புக்கு நேற்று (28) அனுப்பப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொது சுகாதார அமைப்புக்கு ஆதரவளிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், டித்வா புயலால் சேதமடைந்த இலங்கையின் 14 பாலங்களின் கட்டுமானத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் இலங்கைக்கான சீனத் தூதருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
