மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று (3) இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல்,சப்பிரகமுவை மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
