அக்கரப்பத்தனை பஸ் தரிப்பிடத்தில் தங்கியுள்ள அடையாளம் தெரியாத பெண் – உறவினர்களைத் தேடும் மனிதநேய முயற்சிக்கு முடிந்தால் உதவுங்கள்.
இந்தப் பெண் தனது பெயர், முகவரி அல்லது குடும்பத்தினர் தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அக்கரபத்தனை பொலிஸாருக்கோ பிரதேச சபைக்கோ அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
பஸ் தரிப்பிடத்தையே தங்குமிடமாகக் கொண்டு அவர் தனிமையில் இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, அங்குப் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள்,பொதுமக்களுக்கும் இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தப் பெண்ணை ஒரு பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், யாரோ ஒருவரின் தாய், சகோதரி அல்லது உறவினராக இருக்கக்கூடிய ஒரு மனிதராக பார்க்க வேண்டியது நமது பொறுப்பு.
அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்?
அவரது பெயர் என்ன?
அவரைத் தேடி எங்காவது ஒரு குடும்பம் காத்திருக்கிறதா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தற்போது எவருக்கும் தெரியவில்லை.
எனவே, இவரை அடையாளம் காணக்கூடிய உறவினர்கள் அல்லது அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கோ தகவல் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கௌசல்யா
