பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நட்தப்படலாம் என்று கிடைத்திருக்கும் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துச் சீராய்வு மனு ஒன்றைச் சமர்ப்பித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் நேற்று தமது அறிக்கையினை முன்வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அந்த விசாரணைகளின் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான ஏனைய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் சிறையில் உள்ள பல சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கும் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் அனுமதிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில்…

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்: நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இந்தத் தேர்தல்கள் அடுத்தாண்டு நடைபெறும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மாகாண சபைத் தேர்தலையும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலையும் நடத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இடைநிறுத்தப்பட்டு நீண்டகாலமாகியும் அதனை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மலைக்குருவி

எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது!

எல்பிட்டி பிரதேச சபை ஜேவிபி வசமானது

எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது!: காலி மாவட்டத்தின் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டியுள்ளது. நேற்று (26) நடைபெற்ற எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. அதன்படி, எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது! விபரம் வருமாறு:- தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15 ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03 பொதுஜன எக்சத் பெரமுன – 2,612 வாக்குகள் – உறுப்பினர்கள் 02 சுயேச்சைக்குழு 1 – 2,568 வாக்குகள் – உறுப்பினர்கள் 02 பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி – 1,350 வாக்குகள் – உறுப்பினர்கள் 01 தேசிய…

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: ஈரானின் இராணுவத் தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் இன்று நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 20 இராணுவத் தளங்கள் இலக்கானதாகவும் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும் ஈரான் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலையடுத்து ஈரான் வான்பரப்பின் பாதுகாப்பு முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரான், ஈராக் விமான சேவைகள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஓமான், ஈராக், பாகிஸ்தான், மலேசியா, சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் ஆத்திரமூட்டும்…

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார். 29 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழு ஒன்றும் போட்டியிடும் எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த தேர்தலில் 48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க 55,643 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை

ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு 26ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை: உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த் சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கை பற்றித் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சையை அடுத்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செய்திகள் ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அந்தச் சம்பவத்தை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அவற்றைப் பகிரங்கப்படுத்தவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்; “இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன். அதன் பின்னர்,…

பங்களாதேஷ் ஜனாதிபதி விலகக்கோரி போராட்டம்

பங்களாதேஷ் ஜனாதிபதி விலகக்கோரி போராட்டம்

பங்களாதேஷ் ஜனாதிபதி விலகக்கோரி போராட்டம்: பங்களாதேஷில் மீண்டும் மாணவர் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி பதவி விலகக் கோரி இன்று நடந்த இந்தப் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் முயற்சித்தனர். எனினும் அந்த முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். பங்களாதேஷ் அரசு கொண்டு வந்த வேலை ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் தொடங்கிய மாணவர் போராட்டம், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவியை இழந்ததுடன் முடிவுக்கு வந்தது. போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா, அன்றிலிருந்து இந்தியாவிலேயே தங்கியுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்றத்தைக் கூட முற்றுகையிட்ட மாணவர் போராட்டக்காரர்கள் நாட்டில் புதிய ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். மாணவர் தலைவர்களின் பங்களிப்புடன் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது. அதன் பின்னர், நாட்டில்…

விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விஸ்டாரா விமானத்திற்குவெடிகுண்டு மிரட்டல்

விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இந்தியாவின் மும்பையிலிருந்து கொழும்பு வந்த விஸ்டாரா விமானத்திற்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்திய விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இதற்கு முன்பும் விடுக்கப்பட்டு அந்த விமானமும் கட்டுநாயக்காவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இன்றும் தொலைபேசியில் மிரிட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்துத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Airbus A-320 ரக இந்த விமானத்தில் 108 பயணிகளும் 8 விமானப்…

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது: அறுகம்பேயில் இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் கூறினர். இஸ்ரேல் பிரஜைகள் மீது அறுகம்பேயில் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்துப் புலனாய்வுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அதன் விளைவாகவே தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அமெரிக்கத் தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும முன்பே இலங்கை நடவடிக்கையில் இறங்கியிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்டவர்கள் இலங்கையர்கள் என்றும் அதில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அறுகம்பேயில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்போர் பற்றிப் பெயர் விபரங்களுடன் முழுமையான தகவல்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கியிருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது. மலைக்குருவி

நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்பு

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்பு: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் இலங்கை மக்களையும் பாதுகாக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டிலில் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். மத்திய கிழக்கு,கிழக்கு ஐரோப்பாவின் இராணுவ நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்புவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறுகம்பே சுற்றுலாப் பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாமென எச்சரிக்கை செய்திருக்கின்றது. இதனையடுத்து நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகப் பொலிஸும் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை மீது…