கம்பளை குடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (28) இரவு இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டி- நாவலப்பிட்டி வீதியில் கம்பளை நகரில் அமைந்துள்ள குடைத் தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்தினால் தொழிற்சாலைக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
Category: முக்கியச் செய்திகள்
ஊவா மாகாண பிரதம செயலாளர் நியமனம்
ஊவா மாகாண பிரதம செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராகத் திருமதி பி. ஏ. ஜி. பெர்னாண்டோ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி பெர்னாண்டோவிற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க இன்று காலை வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.
இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்
இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மேற்கிலிருந்து தென்மேற்கு நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், கற்பிட்டி முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை முதல் வாகரை வரையிலும் உள்ள…
மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
புகழ்பூத்த மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார். தனது 71 வயதில் இன்று அதிகாலை அமெரிக்காவில் மாரடைப்பால் அவர் காலமானார். டெரி ஜீன் பொலியா என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், ஹல்க் ஹோகன் என்று பிரபல்யம் பெற்றவர். ஹல்க்கின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல் ஹாசன் எம்பியாக சத்தியப்பிரமாணம்
நடிகர் கமல் ஹாசன் எம்பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் இன்று பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இவருடன் மேலும் திமுக உறுப்பினர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 2024 சட்ட சபைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்தமைக்காக அவருக்கு மேல் சபையில் உறுப்பினர் பதவி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது. பார்த்தசாரதி ஶ்ரீனிவாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் கமல் ஹாசன் 1954 நவம்பர் ஏழாந்திகதி பிறந்தவர். 70 வயதான அவர் தேசிய அரசியலில் முதற்தடவையாகப் பிரவேசிக்கின்றார். திரு. கமல் ஹாசன் தமிழ் மொழியில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இன்று பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதையடுத்து அவரது மகள் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர். இன்று பதவியேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் காற்று தொடரும்
இன்று முதல் காற்று தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவ பெயர்ச்சி அதிகரிப்பு காரணமாக நாட்டில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
நிலந்த ஜயவர்தன பதவி நீக்கப்பட்டார்
நிலந்த ஜயவர்தன பதவி நீக்கப்பட்டார் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கடமை தவறியதாக குற்றம் சாட்டப்படிருந்தார். இதன்படி அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்த முடிவு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்தது. இதற்கமைய முறையான ஒழுங்கு விசாரணையின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயத்தால் 2025.07.04 அன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையான ஒழுங்கு விசாரணை அறிக்கை, முறைப்பாட்டை…
ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து
ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து இன்று பகல் ஏற்பட்டது. ஹட்டன் பிரதான நகரில் தனியார் காலணி கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது . இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது . கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது, மேலும் ஹட்டன் டிக்கோயா மாநகரசபை தீயணைப்புப் பிரிவு ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காலணிகள் முற்றிலுமாக எரிந்து சேதமாகின. தீ விபத்தினால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலணிகள் எரிந்ததால் எழுந்த துர்நாற்றத்தால், பகுதிவாசிகள் சிரமப்பட்டனர். ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை…
கொழும்பில் இன்றும் துப்பாக்கிச் சூடு
கொழும்பில் இன்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செம்மணிக்குள் செம்மறிகள் புகுந்ததால் கசமுசா!
செம்மணிக்குள் செம்மறிகள் புகுந்ததால் கசமுசா! ஏற்பட்டது. கொழும்பில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போதே இந்தக் சகமுசா நிகழ்ந்துள்ளது. செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்’ எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்டோர்,’புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?, செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!, யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி, வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து’ போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள்…