இலக்கியத்திற்கான நோபல்பரிசு தென் கொரியாவுக்குக் கிடைத்துள்ளது. 2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார். கவிதை உரைநடை இலக்கியத்திற்கான பரிசாக ஹான் காங்கிற்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய தி வெஜிடேரியன் என்ற கவதை நாவலுக்காக இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படுகிறது. மனித வாழ்க்கை குறித்த கவிதை உரை நடை நாவலை 2007ஆம் ஆண்டு ஹான் காங் வெளியிட்டார். இந்த நூலுக்கு 2016இல் புக்கர் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ் உள்ளிட்ட 25 மொழிகளில் தி வெஜிடேரியன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான…
Category: முக்கியச் செய்திகள்
தபால் வாக்களிக்க 10 வரை விண்ணப்பிக்கலாம்
பொதுத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் 2024 ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்தது. தபாலில் ஏற்படக்கூடிய காலதாமதங்களையும் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கவனத்திலெடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். அதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்று அதாவது, 2024 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் அவை உரிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும்போது ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்கும் முகமாக 2024 ஒக்டோபர் மாதம் 09, 10 ஆகிய இரு தினங்களிலும், பூரணப்படுத்திய தபால் வாக்கு விண்ணப்பங்களை தபாலுக்கு ஒப்படைப்பதைத் தவிர்த்து, அவற்றை ஒவ்வொரு…
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நுண் மரபணு ஆர்.என். ஏ வை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்கின் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுண் மரபணு RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சாகசத்தைப் பார்க்க வந்தவர் உயிரிழப்பு
சென்னையில் விமான சாகசத்தைப் பார்கக் வந்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்துள்ளார். சாகசத்தைப் பார்வையிட வந்திருந்த பொதுமக்கள் பலர் வெப்பம் தாளாமல் மயங்கி வீழந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அதில் 56 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்திய விமானப் படை 92 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்தனர்.சென்னை மெரினாவில் இன்று காலை 11 மணி அளவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் தொடங்கின. இதை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் கண்டுகளித்தனர். மெரினாவில் பொதுமக்கள் இதைக் கண்டுகளிக்க 15க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு…
அரச புலனாய்வுப் பிரிவுக்குப் புதியவர் நியமனம்
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க உத்தரவு
தற்காப்புக்காக குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துத் துப்பாக்கிகள், வெடிபொருள்களைத் திரும்பப் பெற பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளையும் வெடிபொருள்களையும் மீள ஒப்படைக்க வேண்டும். மீளாய்வு செய்து தேவையைத் தீர்மானித்த பின்னர் அந்த நபர்களுக்கு துப்பாக்கிகள் தேவையெனின் திரும்ப வழங்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலை வேரோடு பிடுங்குவோம் – ஈரான்
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி சில பகீர் கருத்துகளைத் தெரிவித்தார். இஸ்ரேல் வேரோடு பிடுங்கப்படும் என்ற அவர், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக எச்சரித்தார். மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவுக்கு நினைவு கூட்டம் ஈரான் நாட்டில் நடைபெற்றது. இதில் ஈரான் நாட்டின் மீயுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி நேரடியாகக் கலந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் கமேனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் நேரடியாக இஸ்ரேல்…
சிலிண்டராக மாறிய கைச்சின்னம்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால அணியினர் கைச்சின்த்தை விட்டுவிட்டுச் சிலிண்டர் சின்னத்திற்கு மாறியுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது அணி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நிமல் சிறிபால டி சில்வாவின் அணியினர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தனர்.
இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு
அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்க எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவிப்பு
கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர். அதன்போது இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் என்று இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர். எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.