62ஆயிரம் அரச வேலைவாய்ப்பில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சுதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். அரச நிறுவனங்களில் சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நியமன அனுமதியை அமைச்சரவையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா பெற்றிருக்கின்றார். இந்த நியமன அனுமதி நுவரெலியா மாவட்டத்திற்கும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளுக்கும் எந்த அளவு பக்க பலமாக அமையப் போகிறது என்பது எதிர்கால நடவடிக்கையைப் பொறுத்தே பார்க்க முடியும் என்று சச்சுதானந்தன் கூறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களது காலப்பகுதியின் ஆசிரியர் நியமனங்கள், அரச ஊழியர்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. மத்திய மாகாண முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் காலப்பகுதியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் கிடைத்தன. இறுதியாக தனது பாராளுமன்ற காலப்பகுதியிலும் மலையகத்துக்கான 740 பட்டதாரி…
Category: முக்கியச் செய்திகள்
நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் பாதுகாப்பு இரும்பு வேலி தேவை
நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு இரும்பு வேலி தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதி கடந்த வருடம் காபட் இடப்பட்டது. அவ்வாறு காபட் இடப்பட்டு செப்பனிட பட்ட பிரதான வீதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக லக்சபான பகுதியில் வளைவுகளில் பாரிய பள்ளத்தாக்கு உள்ளது அத்துடன் ஒரு சில பகுதிகளில் மவுஸ்சாகலை நீர் தேக்க கரையோர பகுதிகளாகும் எதிர் வரும் டிசம்பர் மாதத்தில் சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பித்தவுடன் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்லும் சாலையானதால் இரும்பினால் செய்யப்பட்ட நிறந்தர பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். இதற்கான பணிகளை நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்ட்மோர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி
மஸ்கெலியா – கார்ட்மோர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியை அடுத்த ஆண்டுக்குள் சுற்றுலாத் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். கார்ட்மோர் நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இத்தகைய பகுதிகளை உருவாக்குவதன் மூலம், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பல்வேறு நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இந்தப் பகுதியை சுற்றுலாத் தளமாக உருவாக்க எதிர்பார்க்கப்படடுள்ளது. இந்த பகுதிக்கு தற்போது பல சுற்றுலாப் பயணிகள் வந்த சென்றாலும், அவர்களுக்கு தேவையான வசதிகள் அங்கு இல்லை. அங்கு உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இடங்களையும் நிர்மாணிக்க முடியும். இதுபோன்ற நவீன வசதிகளை இங்கு உருவாக்குவதற்கு அடுத்த பாதீட்டிலிருந்து நிதி ஒதுக்குவோம். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வீதியை…
மலைநாட்டில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்
மலைநாட்டில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. தபால் நிலைங்கள் மூடப்பட்டுள்ளன. புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல் உள்ளிட்ட பல அவசர பிரச்சினைகள் தொடர்பாக கடந்த (18) முதல் நடைபெறும் நாடளாவிய அஞ்சல் சேவைகள் வேலைநிறுத்தத்துடன் இணைந்து நுவரெலியா வரலாற்று சிறப்புமிக்க தபால் அலுவலகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. காலையில் எந்த தபால் ஊழியரும் வேலைக்கு வரவில்லை, காலையில் தபால் அலுவலகம் மற்றும் தபால் அறை மூடப்பட்டிருந்தது. தபால் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து தபால் அலுவலக கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததையும் கவனிக்க முடிந்தது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நுவரெலியா வரலாற்று சிறப்புமிக்க தபால் அலுவலகம் மூடப்பட்டதால், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் பல சுற்றுலா சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தேசபந்து தென்னக்கோன் சிஐடியினரால் கைது
முன்னாள் பதில் பொலிஸ் மாஅதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2022 கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) உத்தியோகத்தர்கள் இன்று கைதுசெய்தனர். தென்னக்கோனை அவரது இல்லத்தில் வைத்துப் பொலிஸார் கைதுசெய்தனர்.
சுற்றுலா சேவை அடிப்படை பயிற்சி
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கான ஐந்து நாள் சுற்றுலா சேவை அடிப்படை பயிற்சி மஸ்கெலியா – நல்லதண்ணியில் நடைபெற்றது. மத்திய மாகாண வர்த்தகம், வணிகம், சுற்றுலாத்துறை ஆகிய பிரிவுகளின் நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் நல்லதண்ணியில் உள்ள துறைசார்ந்தவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது. சுற்றுலா சேவை வழங்குநர்கள் 96 பேருக்கும் சுற்றுலா போக்குவரத்து வசதியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உதவியாளர்கள்,சுற்றுலா தயாரிப்பாளர்கள், உள்ளூர் வழிகாட்டிகள் ஆகியோருக்கு இந்தப் பயிற்சி நடந்தது. ஐந்து நாள் அடிப்படைப் பயிற்சியாகக் கடந்த 2025/08/11 முதல் 2025/08/15 வரை வழங்கப்பட்ட இப் பயிற்சி பட்டறை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள வைட் எலிபண்ட் விருந்தினர் விடுதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்குச் சுற்றுலா வசதி வழங்குநர் உரிமங்கள் வழங்கப்படும் என்று பயிற்சி பட்டறை நடத்திய மத்திய மாகாண சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.…
மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா
மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா மேற்கொண்டனர். மத்திய மாகாண ஆணையாளர், துணை ஆணையாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் சுற்றுலா நிமித்தம் 02.08.2025 அன்று மஸ்கெலியாவுக்கு வருகைதந்திருந்தார்கள். இதன் போது மஸ்கெலியாவில் காணப்படும் ஒரு சில குறைகளை சுட்டிகாட்டியிருந்தோம். முடிந்தளவு நிவர்த்தி செய்து தருவதாக அவர்கள் அறிவித்தார்கள். இந்த நிகழ்வினை மஸ்கெலியா, அம்பகமுவ பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மவுசாகலை நீர்த்தேக்க பகுதியில் உள்ள சமன் தேவாலயத்திற்கு வழிபடச் சென்ற வேளையில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.
லக்ஸபானவில் நீர் மட்டம் உயர்வு: வான் கதவு திறப்பு
தொடர் மழை காரணமாக லக்சபான நீர் மின் நிலைய பகுதியில் உள்ள நீர் அணையின் வான் கதவு திறப்பு. நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்தது வருவதால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக லக்சபான நீர் மின் நிலைய பகுதியில் உள்ள நீர் அணையில் இருந்து தற்போது வான் கதவு ஒன்று மூன்று அங்குலம் திறந்து விட பட்டு உள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் காரணமாக தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து அதிக மழை பெய்யும் பட்சத்தில் ஏனைய வான் கதவுகள் திறந்து விட வாய்ப்பு உள்ளது என அவர் மேலும்…
சாமிமலையில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
தொடர்ந்து பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் வெள்ளம். மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்தது வருகிறது. இதன் காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் கவரவலை கிரகத்தில் உள்ள பல இல்லங்களில் வெள்ள நீர் புகுந்தது உள்ளது.இதன் காரணமாக அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி அம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம்
வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். வேரஹெரவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினர் பெரும்பாலும் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அருகிலுள்ள இடங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து தங்கள் பயணங்களின் போது தாங்களாகவே சாரதிகளாக செயல்படுவதாகவும், இதற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மற்றும்…