திருப்பழுகாமம் கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வரநாதர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் இன்றைய தினம்(20) சிறப்பாக இடம்பெற்றது. பாற்குடபவனியானது திருப்பழுகாமம் ஏரிக்கரைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக சிவன் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்
Category: ஆன்மிகம்
ஆடி மாதம் முதலாந்திகதி இன்று
ஆடி மாதம் முதலாந்திகதி இன்று: மாதங்கள் பன்னிரெண்டு, அதில் தமிழ் மாதங்களின் நான்காவதாக வரும் ஆடி விசேட சிறப்புக்களை கொண்டது. ஆடிமாதம் முதலாம் திகதி தெட்சணாயன காலம் ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர். அயனங்கள் என்பது கதிர்நகர்வு ஆகும். தைமுதல் ஆனி வரையான காலம் உத்தராயணம் என்றும் (வடதிசை நகர்தல்) ஆடி முதல் மார்கழி வரையான காலம் தெட்சணாயனம் (தென் திசை நகர்தல்) என்றும் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் தேவர்களுக்கு பகற்பொழுதாகவும் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரையுள்ள காலம் இரவுக் காலமாகவும் கருதப்படுகின்றது. ஆடி மாதம் முதல் திகதியில் தேவர்கள் பூவுலகம் வருவதாக ஐதீகம். இதனால் தான் மக்கள் ஆடிமாதம் முதலாம் திகதியை மகிழ்வுடன் வரவேற்கிறார்கள். ஆடிமாதம் ஒரு மாதமும் சுப…
மருதமடு அன்னையின் ஆடித்திருவிழா நிறைவு
மருதமடு அன்னையின் திருச்சொருப ஆசீருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா இன்று நிறைவடைந்திருக்கிறது. திருவிழாத் திருப்பலி காலை 6.15 இற்குத் தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், குருநாகல் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஹெரல்ட் அன்ரனி பெரேரா, ஒய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் திருவிழாத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்கள். திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது. திருச்சொரூப பவனியின் நிறைவில் பக்த அடியார்களுக்கு மடு அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டுத் திருவிழா நிறைவடைந்தது. மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆடித்திருவிழா கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜோசப் பெர்னாண்டோ, மன்னார்
கொழும்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள்
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று (21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த யோகா மற்றும் தியான நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்வை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் (SVCC), இலங்கை சுகாதார அமைச்சு, இலங்கை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்தது. இந்த ஆண்டுக்கான யோகா தின கருப்பொருள் “Yoga for One Earth, One Health” என்பதாகும். இது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான சமநிலையை வலியுறுத்துகிறது. விழாவின் ஒரு பகுதியாக, யோகா அறிவை எளிதில் மக்களுக்கு வழங்கும் நோக்கில், யோகா பென்ட்ரைவ் மற்றும் ஹத யோக பிரதீபிகா நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான…
இன்று சர்வதேச யோகா தினம்
இன்று சர்வதேச யோகா தினம் அனுட்டிக்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா மேற்கொண்ட முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை (ஜூன் 21) யோகா தினமாக அறிவித்தது. இந்த நாள் உலகம் முழுவதும் இன்று அனுட்டிப்படுகிறது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கொழும்பு அறிவுத்திருக்கோவில், யாழ்ப்பாணம் அறிவுத் திருக்கோவில் ஆகியன இந்த நாளுக்கான நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. கொழும்பு அறிவித்திருக்கோவிலில் காலை 8.30 இற்கு யோகா தின நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் காலை நடைபெற்றன. நாடு முழுவதிலுமுள்ள (ஒன்பது மாகாணங்களிலும்) 113 ஆயுள்வேத மருத்துவமனைகளில் நிகழ்ச்சிகள் காலை 8.30 முதல் 9.30 வரை நடைபெற்றன. சுகாதார அமைச்சின் ஆயுள்வேத மருத்துவப் பிரிவு சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன…
ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி
ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு முத்தேர் திருவிழா மேளதாள இசை முழங்க, பக்த அடியார்களின் அரோகரா பக்தி பரவசத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேர் பவனி ஆலயத்தில் நடைபெற்ற திரவிய அபிசேகம் வசந்த மண்டப பூஜை உள் வீதி உலா வருதல் ஆகியன இடம்பெற்று தேர் திருவிழா ஆரம்பமானது. இந்தத் தேர் பவனி ஹட்டன் மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் திரும்பி ஹட்டன் புறநகர் வழியாக எம்.ஆர்.டவுன் வரை சென்று பிரதான வீதியூடாக இன்று ஆலயத்தினை வந்தடைந்தது. கடந்த 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான சித்திரா பௌரணமி தேர் திருவிழா, நேற்று முன்தினம் கங்கை நீர்…
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. தமது 88 ஆவது வயதில் பாப்பரசர் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறைசேவையில் இருந்தார்.