62ஆயிரம் அரச வேலைவாய்ப்பில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சுதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். அரச நிறுவனங்களில் சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நியமன அனுமதியை அமைச்சரவையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா பெற்றிருக்கின்றார். இந்த நியமன அனுமதி நுவரெலியா மாவட்டத்திற்கும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளுக்கும் எந்த அளவு பக்க பலமாக அமையப் போகிறது என்பது எதிர்கால நடவடிக்கையைப் பொறுத்தே பார்க்க முடியும் என்று சச்சுதானந்தன் கூறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களது காலப்பகுதியின் ஆசிரியர் நியமனங்கள், அரச ஊழியர்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. மத்திய மாகாண முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் காலப்பகுதியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் கிடைத்தன. இறுதியாக தனது பாராளுமன்ற காலப்பகுதியிலும் மலையகத்துக்கான 740 பட்டதாரி…
Category: அரசியல்
தமிழர்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு
தமிழர்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை நேற்று 19ஆம் திகதி பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பில் அமைந்துள்ள வெஸ்ட் மின்ஸ்ரர் ஹவுசில் பிராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்து உரையாடினார். இதன் போது வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள்எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் , அரசியல் கைதிகள், செம்மணி, காணிப்பிரச்சனைகள், இராணுவத் தலையீடு தொடர்பிலும், நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதனுடன் அரசின் வட கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு
வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான இணையவழி கலந்துரையாடல் இன்று (25) இடம்பெற்றது. இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது, இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும். இந்த இணையவழி கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலக (USTR) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இனவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டேன்
இனவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் அதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதற்கு இந்த நாட்டின் மகா சங்கத்தினர் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். கல்னேவா மகாவலி மைதானத்தில் நேற்று (30) நடைபெற்ற இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று ஜனாதிபதி உரையாற்றினார்.. உடல் ரீதியாக எட்ட வேண்டிய வெற்றிகள் போன்றே ஆன்மீக ரீதியாகவும் அடைய வேண்டிய பல சாதனைகள் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட காலமாக இரக்கம், கருணை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட தர்மத்தைப் போதித்து, அந்த தர்மத்தை…
அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்
அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். கடந்த ஐந்தரை வருடங்களாக விசாரணைகள் என்ற போர்வையில் தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதால்தான் 2019இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கோ அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கத்திற்கோ இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளைச் சட்டத்தின் முன்கொண்டுவருவதற்கான நோக்கம் இருக்கவில்லை. தாம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு…
மே6 சிரமதானத்தையும் வெற்றி கொள்வோம்
மே6 சிரமதானத்தையும் வெற்றி கொள்வோம்: மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளையும் கைப்பற்றுவதற்கு நாம் தயார் நிலையில் இருக்கின்றோம். அதற்குரிய பேராதரவை மக்கள் எமக்கு வழங்கிவருகின்றனர்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின்போது நாட்டை சுத்தப்படுத்தும் சிரமதானத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். நுவரெலியா மாவட்டத்தின் தலைவிதியையும் மாற்றினோம். இன்னும் ஓர் சிரமதானம் எஞ்சியுள்ளது. அதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்போம். பிறப்பு முதல் இறப்புவரை எமது வாழ்க்கையுடன் உள்ளுராட்சிசபைகள் தொடர்புபட்டுள்ளன. எனவே, ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு ஆணை வழங்கிவிடக்கூடாது. கொள்கையை முன்வைத்து பிரச்சாரம்…
ளெரடி என்பதில் பெருமை – ராமலிங்கம்
ளெரடி என்பதில் பெருமை – ராமலிங்கம்: மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், தானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி அடைவதாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் இன்று (17.04.2025) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் ராமலிங்கம் உரையாற்றினார். இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபையின் வேட்பாளர் சு.கபிலன் மற்றும் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, “கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலையென மாறுவது உறுதியாகும். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பி எண்ணி வருகின்றனர்.அதேபோல படுகொலைகளில் ஈடுபட்டவர்கள்,…
பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!
பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!: நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 159 உறுப்பினர்களைப் பெற்று பெருவெற்றியடைந்துள்ளது. மக்களின் 68 இலட்சத்து 63186 வாக்குகள் மூலம் 141 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் மூலம் 18 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதில் 12 பேர் பெண்களாவர். அதில் தமிழர்கள் மூவரும் அடங்குகின்றனர். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 19 இலட்சத்து 68716 வாக்குகளைப் பெற்று 35 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் ஊடாக ஐந்து உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தலா மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி அடைந்திருக்கும் சூழலில் முன்னாள் அமைச்சர்கள்,…
வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும்
வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் பாஷையூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புத் தரப்பினருடன் பேசி மேற்கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வட மாகாத்திற்கே உரிய கைத்தொழிற்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். வடபகுதி மீனவர்கள் தமது கடல் பிராந்தியத்தில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கான உரிமை…
பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு
பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு: யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை. பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு இன்று வைபவரீதியாக நடைபெபற்றது. இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஆளுநர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீதியை திறப்பது தொடர்பிலுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு…