பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அங்கீகாரம்

2நாளில் விசாரிக்க பணிப்புரை

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை நியத்தமைக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடியபோதே அது இடம்பெற்றுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் 14 நாட்களுக்கு மேல் பதவியில் இருந்தால் அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும். அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார நியமித்த பதில் பொலிஸ் மாஅதிபரை அரசியலமைப்புப் பேரவை அங்கீகரித்துள்ளது.

ஒருவழிப் பாதையானது கட்டுநாயக்க நெடுஞ்சாலை

கட்டுநாயக்க நெடுஞ்சாலை

கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழிப் பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு பாதையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுவதும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நெடுஞ்சாலையின் ஒரு வழிப்பாதை மட்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்த மாணவி மரணம்!

தாமரைக் கோபுரம்

கொழும்பு தாமரைக் போபுரத்தைப் பார்வையிடச் சென்ற மாணவி ஒருவர் போபுரத்தின் மேலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்பவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. மாணவி தவறி வீழ்ந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பதைக் கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈஸ்ரர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி

ஜனாதிபதி அநுர

நீர்கொழும்பு தேவாலயத்தில் ஜனாதிபதி உறுதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்களோடும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களோடும் இன்று (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டி புனித செபஸ்தியன் தேவாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த உறுதிமொழீயை வழங்கினார் இன்று காலை கட்டுவாபிட்டி தேவாலயத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கப்பட்டது. பின்னர் ஈஸ்டர் தாக்குலில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21…

மக்களின் ஆணையுடன் புதிய அரசியலமைப்பு

மக்களின் ஆணையுடன் நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மகா சங்கத்தினரிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகளை எடுத்துக்கூறும் விதமாக மகா சங்கத்தினருடன் கலந்துரையாடினார். அதன்போது நாட்டின் வளங்களைக் கொண்டு உச்சகட்ட பலன்களை அடைந்து வலுவான நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்திய மகாநாயக்க தேரர்கள், அதனால் இலங்கை உலகில் சுயாதீன நாடாக எழுந்து நிற்க முடியும் என்றும் தெரிவித்தனர். பாராளுமன்ற தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் அரசியல் ரீதியான அமைதிக் காலம் நிலவுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, செய்ய வேண்டியுள்ள பல்வேறு பணிகளை தேர்தலில்…

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க உத்தரவு

தற்காப்புத் துப்பாக்கி

தற்காப்புக்காக குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துத் துப்பாக்கிகள், வெடிபொருள்களைத் திரும்பப் பெற பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளையும் வெடிபொருள்களையும் மீள ஒப்படைக்க வேண்டும். மீளாய்வு செய்து தேவையைத் தீர்மானித்த பின்னர் அந்த நபர்களுக்கு துப்பாக்கிகள் தேவையெனின் திரும்ப வழங்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கலாநிதி ஜெய்சங்கர்- ரணில் சந்திப்பு

ஜெய்சங்கர் ரணில் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். புதிய அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான வலுவான உறவைப் பேணுவதாக தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலை வேரோடு பிடுங்குவோம் – ஈரான்

இஸ்ரேலைப் பிடுங்குவோம்

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி சில பகீர் கருத்துகளைத் தெரிவித்தார். இஸ்ரேல் வேரோடு பிடுங்கப்படும் என்ற அவர், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக எச்சரித்தார். மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவுக்கு நினைவு கூட்டம் ஈரான் நாட்டில் நடைபெற்றது. இதில் ஈரான் நாட்டின் மீயுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி நேரடியாகக் கலந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் கமேனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் நேரடியாக இஸ்ரேல்…

இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர்கள்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று (04) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது இராஜதந்திரி இவர்.

இனி அரசியல் பழிவாங்கல் இல்லை – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி அநுர

v வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.