பாதையில் சென்ற வான் பள்ளத்தில் பாய்ந்ததால் எட்டுப்பேர் காயமடைந்த சம்பவம் நுவரெலியா நானுஓயா தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து (10) காலை 5:00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், வேனின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். ஹற்றன் க. கிருஷாந்தன்
Category: முக்கியச் செய்திகள்
நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
அட்டை கடித்ததால் வடிந்த இரத்தத்தைக் கழுவச் சென்றபோது நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹற்றன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் நேற்று தவறி வீழ்ந்த 17 வயது மாணவனைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அரங்கலை கடற்படை சுழியோடிகளின் முயற்சியால் இன்று (09) மதியம் மாணவனின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது ராம் மூர்த்தி தமிழ் மாறன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த மாணவன் சக மாணவர்களுடன், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, நீர்த்தேக்கத்திற்குப் புகைப்படம் எடுக்க சென்றுள்ளார். பின்னர் அவர் அட்டை கடிக்குள்ளானதால் காலில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தத்தைக் கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறியபோது நீர்த்தேக்கதில் விழுந்ததாகவும்…
சிங்கமலை அணைக்கட்டில் வீழ்ந்த மாணவன்
முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய்
முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயைத் தெரிவு செய்து செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை, பனைவூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், இன்று (04) தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி அல்லது மதுரையில் 2ஆவது மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மருதமடு அன்னையின் ஆடித்திருவிழா நிறைவு
மருதமடு அன்னையின் திருச்சொருப ஆசீருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா இன்று நிறைவடைந்திருக்கிறது. திருவிழாத் திருப்பலி காலை 6.15 இற்குத் தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், குருநாகல் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஹெரல்ட் அன்ரனி பெரேரா, ஒய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் திருவிழாத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்கள். திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது. திருச்சொரூப பவனியின் நிறைவில் பக்த அடியார்களுக்கு மடு அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டுத் திருவிழா நிறைவடைந்தது. மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆடித்திருவிழா கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜோசப் பெர்னாண்டோ, மன்னார்
பஸ் கட்டணம் 0.55 வீதத்தால் குறையும்
ஜூலை 4 முதல் பஸ் கட்டணம் 0.55 வீதத்தால் குறையும் என்று போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 0.55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள் விலையைச் சரிசெய்த பிறகு புதிய பேருந்து கட்டண திருத்தத்தை 0.55% குறைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தத் திருத்தமும் இருக்காது என்றும் ஆணைக்குழு கூறுகிறது.
கஹவத்தையில் இருவரைக் கடத்திச்சென்று துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் (27) காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் 22 வயதுடையவர் என்றும் மற்றையவர் 27 வயதுடையவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
டிரம்ப் எதிர்பார்த்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்
தற்போதைய நீதிமன்ற விசாரணைப் பருவத்தின் கடைசி நாளில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு அவர் எதிர்பார்த்த வெற்றியைத் தந்துள்ளது. அதன்படி, அமெரிக்க அதிபரின் அதிகார வரம்பை பயன்படுத்திப் பார்க்கும் விதமாக அவர் தனக்கென வகுத்துள்ள சர்ச்சைக்குரிய, பரந்த அடிப்படையிலான திட்டங்களை அமல்படுத்துவது அவருக்கு எளிதாகியுள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஆறு பழமைவாதப் போக்குடைய நீதிபதிகள் அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க மூன்று தாராளவாத நீதிபதிகள் அதற்கு எதிராக மாற்றுக் கருத்துத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு அதிபரின் கொள்கைகளைத் தடுக்கும் நீதிபதிகளின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது. இதனால், நீதித் துறைக்கும் அதிபருக்கும் இடையிலான அதிகார வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க கூட்டரசு நீதிபதிகள் மூவர் ஜனவரி மாதம் பிறப்பை வைத்து குடியுரிமை பெறுவதற்கு வரம்பு விதித்த அதிபரின் நிர்வாக…
தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கரண்டியைக் கையிலெடுத்த அமைச்சர்கள்
இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கரண்டியைக் கையிலெடுத்த அமைச்சர்கள் பண்டாரவளை கபரகலை தோட்டத்தில் வரலாறு படைத்துள்ளனர். இதுநாள் வரை மலையகம் கண்டிராத அரசியல் மாற்றம் இது என்கிறார்கள் நெட்டிசன்கள். மண்சரிவில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த பூனாகலை – கபரகலை தோட்ட மக்கள் செயலிழந்துள்ள மாக்கந்தை தேயிலைத் தொழிற்சாலையில் கடந்த ஆட்சியாளர்களால் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எவ்வித வசதிகளுமற்ற அந்த அகதி முகாமில் நாதியற்றவர்களாகப் பாதிக்கப்பட்டவர்கள் கைவிடப்பட்டிருந்த மக்களுடன் மாபெரும் இந்த சிரமதானப் பணியில், பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், அம்பிகா செமுவேல், ரவீந்திர பண்டார ஆகியோரும் இணைந்து கொண்டனர். அத்துடன், இலங்கை இராணுவத்தினர், ஓய்வு பெற்ற முப்படையினர், அரச உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என்று பலரும் இச்சிரமதானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
நோர்வூட் பிரதேச சபையிலும் தேமசக்தி ஆட்சி
நோர்வூட் பிரதேச சபையிலும் தேமசக்தி ஆட்சி அமைத்துள்ளது. நோர்வூட் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தவிசாளர், உப தவிசாளர், தெரிவு இன்று (27) காலை 09.00 மணியளவில் நோர்வூட் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன், பகிரங்க வாக்கெடுப்பு மூலம் நகர சபையின் புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நடராஜா சிவக்குமார் சபையின் உப தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நோர்வூட் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கணபதி குழந்தைவேல் ரவி ஆகியோர் தவிசாளர்…