ஊவா மாகாண பிரதம செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராகத் திருமதி பி. ஏ. ஜி. பெர்னாண்டோ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி பெர்னாண்டோவிற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க இன்று காலை வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.
Category: தற்போதைய செய்திகள்
ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது முய்சு தலைமையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அங்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் அங்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதிவரை அங்குத் தங்கியிருப்பார்.
ஜனாதிபதி அனுர மாலைதீவு சென்றார்
ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) காலை மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்குப் பயணமானார். மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பார். இந்த விஜயத்தின்போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள். இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளன. இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு இவ்வருடத்துடன் 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் தருணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத், சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரும் இணைந்துள்ளனர்.
திருமணத்திற்குச் செல்லவிருந்த பிள்ளை ஆற்றில் வீழ்ந்து மரணம்
திருமணத்திற்குச் செல்லவிருந்த பிள்ளை ஆற்றில் வீழ்ந்து மரணம் அடைந்த சம்பவமொன்று கொட்டகலைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்திச் செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த நான்கு வயது பிள்ளையே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்லவிருந்த நிலையில், தனது மகளை தயார் நிலையில் வைத்து விட்டுப் பிள்ளையின் தாய் தயாராகி கொண்டிருந்த வேளை, பிள்ளை வீட்டின் அருகிலிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (26)) இடம்பெற்றுள்ளது. பின்னர் பிள்ளையைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார், பொதுமக்கள் இணைந்து ஈடுபட்ட போது சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட பிள்ளை சடலமாக மீட்கப்பட்டுக் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகப்…
வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு
வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான இணையவழி கலந்துரையாடல் இன்று (25) இடம்பெற்றது. இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது, இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும். இந்த இணையவழி கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலக (USTR) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பென்சனுக்கு ஆப்புவைக்கும் சட்டமூலம் விரைவில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பென்சனுக்கு ஆப்புவைக்கும் சட்டமூலம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள்தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களுக்காக சிறந்த முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளன எனவும் அவர் கூறினார். அமைச்சர் நேற்று நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார். நெடுந்தீவு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார். அதன்பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், ” தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தப்பவே…
ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து
ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து இன்று பகல் ஏற்பட்டது. ஹட்டன் பிரதான நகரில் தனியார் காலணி கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது . இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது . கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது, மேலும் ஹட்டன் டிக்கோயா மாநகரசபை தீயணைப்புப் பிரிவு ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காலணிகள் முற்றிலுமாக எரிந்து சேதமாகின. தீ விபத்தினால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலணிகள் எரிந்ததால் எழுந்த துர்நாற்றத்தால், பகுதிவாசிகள் சிரமப்பட்டனர். ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை…
செம்மணிக்குள் செம்மறிகள் புகுந்ததால் கசமுசா!
செம்மணிக்குள் செம்மறிகள் புகுந்ததால் கசமுசா! ஏற்பட்டது. கொழும்பில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போதே இந்தக் சகமுசா நிகழ்ந்துள்ளது. செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்’ எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்டோர்,’புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?, செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!, யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி, வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து’ போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள்…
எதிர்க் கட்சி தமிழைக் கொச்சைப்படுத்துகிறது
எதிர்க் கட்சி தமிழைக் கொச்சைப்படுத்துகிறது என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் மொழியைக் கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்தார. அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு, ‘எனது தாய் மொழி தமிழ். அந்த மொழியிலேயே நான் பதிலளித்தேன். கேட்கப்பட்ட கேள்விக்குத் தெளிவாக விளக்கமளித்தேன். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தமிழ் மொழியைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். தமிழ் மொழியைக் கொச்சப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ளனர். நானும் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன். ஒருவரின் சிரிப்பு மற்றும் நக்கலை பார்க்கும்போது அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பது தெரியும். தமிழ் மொழியில் பதிலளிக்கும்போது…
நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
அட்டை கடித்ததால் வடிந்த இரத்தத்தைக் கழுவச் சென்றபோது நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹற்றன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் நேற்று தவறி வீழ்ந்த 17 வயது மாணவனைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அரங்கலை கடற்படை சுழியோடிகளின் முயற்சியால் இன்று (09) மதியம் மாணவனின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது ராம் மூர்த்தி தமிழ் மாறன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த மாணவன் சக மாணவர்களுடன், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, நீர்த்தேக்கத்திற்குப் புகைப்படம் எடுக்க சென்றுள்ளார். பின்னர் அவர் அட்டை கடிக்குள்ளானதால் காலில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தத்தைக் கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறியபோது நீர்த்தேக்கதில் விழுந்ததாகவும்…