காஷ்மிர் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம்

காஷ்மிர் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம்

காஷ்மிர் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார். பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ், ரஷிய அதிபர் புடின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளளனர்.

சென்னையில் மூவருக்கு கொரோனா வைரஸ்!

சென்னையில் மூவருக்கு கொரோனா வைரஸ்!

சென்னையில் மூவருக்கு கொரோனா வைரஸ்!: கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரத்தை, பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த, 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 3 பேரும் நலமுடன் உள்ளனர் என்றும் கொரோனா தொற்று பரவும் வகையிலான பாதிப்பு இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை பிரிவு தெரிவித்து உள்ளது.

நடிகர் டில்லி கணேஷ் காலமானார்

நடிகர் டில்லி கணேஷ் காலமானார்: வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் அறிவித்துள்ளனர். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் நகைச்சுவை, மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் கோலோச்சியுள்ளார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார். தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் 1976-ல் திரைத்துறைக்கு வந்தார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் ‘டெல்லி’ நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார்.…

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படையின் 67.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 53 பணியாளர்கள் உள்ளனர். ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் வரும் 13ஆம் தேதி தீவில் இருந்து புறப்பட உள்ளது. இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்கும் காலகட்டத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளில் அதன் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய கடற்படையினர் குழு நாட்டின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு

விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விஸ்டாரா விமானத்திற்குவெடிகுண்டு மிரட்டல்

விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இந்தியாவின் மும்பையிலிருந்து கொழும்பு வந்த விஸ்டாரா விமானத்திற்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்திய விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இதற்கு முன்பும் விடுக்கப்பட்டு அந்த விமானமும் கட்டுநாயக்காவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இன்றும் தொலைபேசியில் மிரிட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்துத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Airbus A-320 ரக இந்த விமானத்தில் 108 பயணிகளும் 8 விமானப்…

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி!

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி அறிமுகமாவுள்ளது. பெங்களூரு விமான நிலையத்திலிருந்து இந்த மின்சார பறக்கும் டாக்ஸி அறுமுகமாகவுள்ளதாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டுள்து. பெங்களுரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு வாகனத்தில் தரைமார்க்கமாக பயணித்தால் 3 மணி நேரமாகுமாம். இனி இந்த சிரமம் இருக்காது, 19 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்கிறது பெருநகர நிர்வாகம். 1,700 ரூபாய் கட்டணம்… 19 நிமிட பயணம்… சர்வதேச விமான நிலையம் முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரை மின்சார பறக்கும் டாக்ஸி திட்டத்தை கொண்டு வரப்போகிறது பெருநகர நிர்வாகம். இது முதற்கட்டம் என்றும், இதனால் மூன்று மணி நேரப் பயணம் வெறும் 19 நிமிடங்களாக குறையும் எனவும் கூறுகின்றனர். இந்தச் சேவையை வழங்க, தனியார் நிறுவனம் தடையில்லாச் சான்று அனுமதிக்காக விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில்…

இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு

இந்திய கடற்படைக் கப்பல்

இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு: இந்திய கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் நேற்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளது. அதன் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கப்பலானது பல்வேறு தொழில்நுட்ப கருவிகளைக் நாட்டுக்கு கொண்டுவந்துள்ளதுடன், இந்த பொருட்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!

விஸ்டாரா விமானத்திற்குவெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி! : இந்திய விமானங்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பயணிகள் மத்தியில் விமானப் பயணம் செய்வதில் பீதி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை சுமார் இருபது விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விஸ்டாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு விமானம் வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி அடைவதற்கு முன்னதாகக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் தரையிறக்கப்படுவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் விமானிக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பிற்கும் அறிவிக்கப்பட்டுப் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுக் கடும் சோதனை நடத்தப்பட்டது. குண்டு செயலிழக்கும் பிரிவினரும் விரைந்து வந்து தேடுதல் நடத்தியபோதிலும் குண்டு எதுவும் அகப்படவில்லை. அந்த விமானத்தில் 96 பயணிகளும் விமானச் சிப்பந்திகளும்…

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2500 ஓட்டங்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2500

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2500 ஓட்டங்கள்: டோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து, 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.…

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி!

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி! அது என்ன ஆங்கரை?அச்சிற்றூரைப் பற்றி யோசித்தேன்பளிச்சிட்டது எனக்குள் ஒரு பதில் ஆணலை பெண்ணலை போன்றுஆண்+கரை = ஆங்கரை என்றும்அதற்குத் துணையாக அமைந்த பெண் பெயர்தான் “பைரவி.” அர்த்தநாரியாகிய அந்தச் சிவனும் பார்வதியும் ஒன்றாகி அமைந்ததால் “ஆங்கரை பைரவி” எனும் அதியற்புத அதிர்வலைகளைக் கொண்ட திருநாமம் இக் கதாநாயகனுக்கு இயல்பாய் அமைந்து விட்டது. யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி பற்றி இப்போது புரிந்திருக்கும். பிட்டுக்கு மண் சுமந்தவர் இறைவனார் சிவன் தமிழ்கூறு நல்லுலகில் தன் பெயர் நன்முறையில் நிலைக்கப் பாடுபட்டவர் (நாளும் பாடுபடுபவர்) நம்ம “ஆங்கரை பைரவி” அவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரெழுதி வாசித்துக் கடக்க முடியாமல் என்னை மூர்ச்சையாகிக் கீழே விழச் செய்தது இவரின் “பின்னிருக்கையில் ஒரு போதிமரம்.” எனும் தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு நூல். இப்பொழுதுக் “காஞ்சுருட்டான்”…