ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை

வாக்குமூலம் வழங்க நான் தயார்

ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை: உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த் சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கை பற்றித் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சையை அடுத்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செய்திகள் ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அந்தச் சம்பவத்தை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அவற்றைப் பகிரங்கப்படுத்தவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்; “இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன். அதன் பின்னர்,…

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது: அறுகம்பேயில் இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் கூறினர். இஸ்ரேல் பிரஜைகள் மீது அறுகம்பேயில் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்துப் புலனாய்வுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அதன் விளைவாகவே தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அமெரிக்கத் தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும முன்பே இலங்கை நடவடிக்கையில் இறங்கியிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்டவர்கள் இலங்கையர்கள் என்றும் அதில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அறுகம்பேயில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்போர் பற்றிப் பெயர் விபரங்களுடன் முழுமையான தகவல்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கியிருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது. மலைக்குருவி

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குப் பெண்களிடம் வாக்கு கேட்பதற்கு எந்தத் தார்மிக உரிமையும் கிடையாது என அக்கட்சியின் கொழும்புக்கிளை முன்னாள் செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திருமதி மிதிலா ஶ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்றது. அப்போது மிதிலா ஶ்ரீபத்மநாதன் கருத்து தெரிவித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குள் இந்த விடயமாகப் பல நாள் குரல் எழுப்பியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாற்றம் என்பது பெண்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பெண்களில் மாற்றம் இல்லாது சமூகத்தில் மாற்றம் ஏற்படாது. சமூகத்தில் மாற்றம் இல்லாது எதனையும் செய்ய முடியாது. வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பு மொத்த உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அதே போல தான் சமூகமும் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்…