மகிந்தவின் சிறப்புரிமை எதுவும் நீக்கப்படவில்லை

மகிந்தவின் சிறப்புரிமைகள் எதுவும் நீக்கப்படவில்லை

மகிந்தவின் சிறப்புரிமை எதுவும் நீக்கப்படவில்லை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. அந்தச் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் பின்வரும் சலுகைகளை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்துக்கும், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கும் செயலக கொடுப்பனவுக்கும் உரித்துடையவர். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. Mercedes Benz -600 maybatch (B/P) car 2008, Toyota Land Cruiser – 2017, Mercedes Benz – G63 AMG 4*4 2850 jeep 2013…

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்: தற்போது ஆங்காங்கே எட்டிப்பார்க்க முயற்சிக்கும் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதிக்குப் பின்னர் முடிவுக்கு வரும் என்று தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தங்கள் காரணமாக நாடு எதிர்நோக்கும் விரும்பத்தகாத அனுபவங்கள் நவம்பர் 14ஆம் திகதிக்குப் பின்னர் முடிவுக்கு வரும் எனவும், இதுவே இந்த மாற்றக் காலம் எனவும் லக்ஷ்மன் நிபுணாராச்சி தெரிவித்துள்ளார். கஸ்பாவ நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் வேலைநிறுத்தம் என்றால் என்ன என்று கூட சொல்லித்தர வேண்டிய நிலை வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வருவதாகத் தெரிவித்த நிபுணாராச்சி: “எங்கள் நாடு மிகவும் விரும்பத்தகாத…

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!, இஸ்ரேல் படையினர் வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து மாடி குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியுள்ளதாக உதவிக் குழுக்கள் தெரிவிக்கின்றன. சுகாதார திணைக்கள ஊழியர்கள் மருந்துப் பற்றாக்குறையினால் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இன்று

பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இன்று

பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு: பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகிறது. மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் எதிர்வரும் நவம்பர் நான்காம் திகதிவரை நடைபெறும். முப்படை முகாம்கள், அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அளிக்க முடியும். உரிய நாள்களில் தபால் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல்அலுவலகங்களில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இன்று நடைபெறும்போது நிறுவன அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார். டிஜிற்றல் திரையால் பிரசாரம்…

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்யமுடியாது!

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்ய முடியாது

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்யமுடியாது! : எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிற்றல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்யமுடியாது! என்பதுடன் எந்தவொரு வேட்பாளரும் தேவையற்ற செல்வாக்கின் ஊடாக வாக்குகளைப் பெற முயற்சித்தால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது. வன்முறைச் செயல்கள் தொடர்பான 8 முறைப்பாடுகள் அவற்றில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவிற்கு நேற்று மட்டும் 78 முறைப்பாடுகள்…

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி

ஒற்றறையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி: தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி என்று அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 4.30 அளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி தமது கட்சி மாத்திரமே என்றும் இதுபற்றி வேறு எந்த ஒரு கட்சியும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடக்கின்றன. இந்தப் 15 வருடங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி கலந்து கொண்டுள்ளதா?.வடக்கு கிழக்கில் காணாமல்…

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்: நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இந்தத் தேர்தல்கள் அடுத்தாண்டு நடைபெறும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மாகாண சபைத் தேர்தலையும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலையும் நடத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இடைநிறுத்தப்பட்டு நீண்டகாலமாகியும் அதனை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மலைக்குருவி

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: ஈரானின் இராணுவத் தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் இன்று நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 20 இராணுவத் தளங்கள் இலக்கானதாகவும் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும் ஈரான் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலையடுத்து ஈரான் வான்பரப்பின் பாதுகாப்பு முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரான், ஈராக் விமான சேவைகள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஓமான், ஈராக், பாகிஸ்தான், மலேசியா, சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் ஆத்திரமூட்டும்…

ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு: ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானின் (Masoud Pezeshkian) விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார். ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு நடத்தியபோது தற்போதைய பொருளாதார, அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார். இலங்கைக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், நாட்டுக்குள் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கும் ஈரானுக்கு மிடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு தொடர்புகள் குறித்து இதன்போது நினைவுகூறப்பட்டது. பல துறைகள் ஊடாக…

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார். 29 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழு ஒன்றும் போட்டியிடும் எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த தேர்தலில் 48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க 55,643 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை