நியாயமான விலையில் அரிசி விற்பனை

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்ய அனைத்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் அரிசிக்கான நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரிசி வியாபாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசி விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார். விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும்…

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு: பிவித்துரு கெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை அறிககையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. என். ஜே. டி. அல்விஸ் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் முற்று முழுதாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி ஜயவர்தன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றி ஷானி அபேசேகர ஆகியோரை இலக்குவைத்துத் தயாரிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த இருவரும் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் பேரவையில் இணைந்துகொண்டதன் பின்னரே விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித்த ஹேரத் கூறினார். கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு செய்வதற்கான காரணத்தை விளக்கிய அமைச்சர், 2024 ஜூன் மாதம்…

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி!

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி அறிமுகமாவுள்ளது. பெங்களூரு விமான நிலையத்திலிருந்து இந்த மின்சார பறக்கும் டாக்ஸி அறுமுகமாகவுள்ளதாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டுள்து. பெங்களுரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு வாகனத்தில் தரைமார்க்கமாக பயணித்தால் 3 மணி நேரமாகுமாம். இனி இந்த சிரமம் இருக்காது, 19 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்கிறது பெருநகர நிர்வாகம். 1,700 ரூபாய் கட்டணம்… 19 நிமிட பயணம்… சர்வதேச விமான நிலையம் முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரை மின்சார பறக்கும் டாக்ஸி திட்டத்தை கொண்டு வரப்போகிறது பெருநகர நிர்வாகம். இது முதற்கட்டம் என்றும், இதனால் மூன்று மணி நேரப் பயணம் வெறும் 19 நிமிடங்களாக குறையும் எனவும் கூறுகின்றனர். இந்தச் சேவையை வழங்க, தனியார் நிறுவனம் தடையில்லாச் சான்று அனுமதிக்காக விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில்…

பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்!

பராட்டே சட்டத்தை இடைநிறுத்துமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை

பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்! என்றும் வேறு எவருக்கும் அது சாத்தியமில்லை என்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்! என்பதோடு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதற்கான தீர்மானங்களை எடுக்கக்கூடிய குழுவொன்று தமது கட்சிக்குள் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் பயணிக்க எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. எம்மிடம் கீழ்த்தரமான அரசியல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு

இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு

இந்திய கடற்படைக் கப்பல்

இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு: இந்திய கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் நேற்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளது. அதன் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கப்பலானது பல்வேறு தொழில்நுட்ப கருவிகளைக் நாட்டுக்கு கொண்டுவந்துள்ளதுடன், இந்த பொருட்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி

ரயில்வே தொழினுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தம்

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி வடக்கு ரயில் மார்க்கத்தின் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. றாளை திங்கட்கிழமை யாழ்தேவி ரயில் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மட்டுமே ரயில் சேவையில் ஈடுபடுகிறது. நாளை முதல் மீண்டும் யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதையிட்டுப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெறலாம்

தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது ஹமாஸ்

ஹமாஸ் தலைவர் சின்வார்

தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது ஹமாஸ்: தமது தலைவர் கொல்லப்பட்டார் என்தை இன்று ஹமாஸ் இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. தமது தலைவர் போராடியே இறந்தார் என்று தெரிவித்துள்ள ஹமாஸ் இயக்கம், இனிப் பயணக் கைதிகள் விடுதலை என்ற பேச்சக்கு இடமில்லை என்றும் அது போர் நிறுத்தத்திற்குப் பின்னர் ஆராய வேண்டிய விடயம் என்றும் தெரிவித்துள்ளது. இதெவேளை, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (18) பதிலளித்துள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறைக்கு வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்றும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத் தலைவர் யஹியா சின்வார் அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முக்கிய நபராக…

தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு

தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சந்தையில் தற்போது தேங்காய்க்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் மக்களுடன் தாமும் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் அதன் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் 150 ரூபாய்க்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தற்போது காணப்படவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

சீனப்பிரதமர் விஜயத்தால் பாகிஸ்தான் முடக்கம்

https://www.malaikuruvi.com/2024/10/10/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa/

சீனப்பிரதமர் விஜயத்தால் பாகிஸ்தான் தலைநகர் பாதுகாப்புக்காக முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீனப் பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியான் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வந்திருப்பது சிறப்பம்சமாகும். இஸ்லாமாபாத் நகருக்கு மூன்று நாள்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநாட்டையொட்டி நகரில் உள்ள பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன. மேலும், நகரின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிசாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இலக்கியத்திற்கான நோபல்பரிசு தென் கொரியாவுக்கு

கொழும்பு பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

தாமரைக் கோபுரம்

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.