துப்பாக்கிச்சூடுபட்ட பிரியசாத் ஆபத்தான நிலையில் இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். டான் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படவில்லை எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்த பொலிஸார், பிரியசாத் சாகவில்லை என்றும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Category: முக்கியச் செய்திகள்
சென்னையில் மூவருக்கு கொரோனா வைரஸ்!
சென்னையில் மூவருக்கு கொரோனா வைரஸ்!: கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரத்தை, பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த, 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 3 பேரும் நலமுடன் உள்ளனர் என்றும் கொரோனா தொற்று பரவும் வகையிலான பாதிப்பு இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை பிரிவு தெரிவித்து உள்ளது.
வலுவடையும் டிரம்புக்கு எதிரான போராட்டம்
வலுவடையும் டிரம்புக்கு எதிரான போராட்டம்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தின இவரது இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். அப்போது அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்ற அவர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்
பாப்பரசர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்:
பாப்பரசர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்: பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்கள் சார்பாக பாப்பரசருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்திற்காக அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஓர் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதியின் X கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது அவரது கருணை, நீதி, மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே6 சிரமதானத்தையும் வெற்றி கொள்வோம்
மே6 சிரமதானத்தையும் வெற்றி கொள்வோம்: மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளையும் கைப்பற்றுவதற்கு நாம் தயார் நிலையில் இருக்கின்றோம். அதற்குரிய பேராதரவை மக்கள் எமக்கு வழங்கிவருகின்றனர்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின்போது நாட்டை சுத்தப்படுத்தும் சிரமதானத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். நுவரெலியா மாவட்டத்தின் தலைவிதியையும் மாற்றினோம். இன்னும் ஓர் சிரமதானம் எஞ்சியுள்ளது. அதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்போம். பிறப்பு முதல் இறப்புவரை எமது வாழ்க்கையுடன் உள்ளுராட்சிசபைகள் தொடர்புபட்டுள்ளன. எனவே, ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு ஆணை வழங்கிவிடக்கூடாது. கொள்கையை முன்வைத்து பிரச்சாரம்…
பாலுக்கு வற் வரி விலக்களிப்பு
பாலுக்கு வற் வரி விலக்களிப்பு: பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால், தயிர் ஆகியவை வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பாலுக்கு வற் வரி விலக்களிப்பு தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுப்புக்கு அமைவாக, புதிய பால் குறைந்தபட்சம் நூற்றுக்கு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெட் வரி திருத்த சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். அதன்படி, சட்டம் குறித்த…
கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை
கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை: கண்டி நகரத்தைச் சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்விச் செயலாளர் மாதுபானி பியசேன விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். அதற்கமைய, ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் 49 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 முதல் 27 வரையான காலப்பகுதியில் விசேட தலதா கண்காட்சி இடம்பெறவுள்ளதால் இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூடப்படவுள்ள பாடசாலை விபரங்களை கீழே காணலாம் கண்டி வலயம் குருதெணிய மகா வித்தியாலயம் வித்தியா லோக மகா வித்தியாலயம் தென்னெகும்புர தர்மராஜ வித்தியாலயம் டீ.எஸ்.சேனாநாயக்க மகா வித்தியாலயம் மஹாஓயா மகளிர் வித்தியாலயம் பெரவட்ஸ் வித்தியாலயம் அம்பிடிய சித்தார்த வித்தியாலயம் தம்பவெல கனிஷ்ட வித்தியாலயம் கோதமீ மகளிர் வித்தியாலயம் ஶ்ரீ ராஹூல தேசிய பாடசாலை புனித…
கடவுச்சீட்டு வழங்கும் பணியில் மட்டுப்பாடு
கடவுச்சீட்டு வழங்கும் பணியில் மட்டுப்பாடு: கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் இன்று (15) முதல் ஏப்ரல் 17 வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அந்நாட்களில் டோக்கன்கள் வழங்கல் மதியம் 12 மணி வரை மட்டுமே இடம்பெறும் என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒரு நாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை அந்த நாட்களில் இயங்காது என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் அட்டைகளைப் பயன்படுத்தலாம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் அட்டைகளைப் பயன்படுத்தலாம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் அட்டைகளைப் பயன்படுத்தலாம்: அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது debit மற்றும் credit அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். கொட்டாவை, கடவத்தை சந்திப்புகளில் இது ஏற்கனவே ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
வாக்குமூலம் வழங்க நான் தயார்
வாக்குமூலம் வழங்க நான் தயார்!: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வாக்குமூலம் வழங்கத் தான் தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.