Blog

காற்றில் பறந்தது டிரம்பின் பேச்சு: ஈரான் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காற்றில் பறந்தது டிரம்பின் பேச்சு

காற்றில் பறந்தது டிரம்பின் பேச்சு என்பதைப்போல ஈரானும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்துகின்றன. இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அவரது அறிவிப்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரோக்கி ஆகியோர் உறுதிப்படுத்தியிருந்தனர். எனினும், போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. அதனால், ஈரான் மீது முழு அளவில் தாக்குதல் நடத்துமாறு தமது படைகளுக்குத் தளபதி உத்தரவிட்டுள்ளார். எனினும், இந்தத் தகவலை ஈரான் மறுத்துள்ளது. இஸ்ரேல்தான் முதலில் தாக்குதலைத் தொடங்கியதாகவும் அதன்படி பதில் தாக்குதலை நடத்துவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரவு ஏழு மணிவரை யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம்

ஏழு மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம்

ஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். எனினும், அவரது அறிவிக்குப் பின்னரும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்னர் இரு நாடுகளும் தற்காலிகமாக இன்று இரவு ஏழு மணி வரை போர் நிறுத்தம் செய்வதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேல் வான்பரப்பை மீண்டும் திறந்துள்ளது.

ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு

ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு

ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அணு நிலைகளை அழித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வீச்சு மூன்று இடங்களில் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியதாகத் தெரிவித்துள்ள டிரம்ப் படையினரை பாராட்டியுள்ளார்.

கொழும்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள்

கொழும்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள்

சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று (21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த யோகா மற்றும் தியான நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்வை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் (SVCC), இலங்கை சுகாதார அமைச்சு, இலங்கை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்தது. இந்த ஆண்டுக்கான யோகா தின கருப்பொருள் “Yoga for One Earth, One Health” என்பதாகும். இது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான சமநிலையை வலியுறுத்துகிறது. விழாவின் ஒரு பகுதியாக, யோகா அறிவை எளிதில் மக்களுக்கு வழங்கும் நோக்கில், யோகா பென்ட்ரைவ் மற்றும் ஹத யோக பிரதீபிகா நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான…

ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையில் போர் நடந்து வரும் தறுவாயில் ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நில நடுக்கம் றிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. ஈரானின் செமினான் மாகாணத்திற்கு 37 கிலோ மீற்றர் தென் மேற்காகப் பத்துக் கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இந்த நிலநடுக்கம் அணுவாயுதப் பரிசோதனையால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அணுவாயுத நிலையங்களை நிலத்திற்குக் கீழ் அமைந்திருந்தாலும் சோதனை செய்ததால் ஏற்பட்ட நில நடுக்கமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

ஏர் இந்தியா முன்பதிவில் விழ்ச்சி

ஏர் இந்தியா முன்பதிவில் விழ்ச்சி

ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். மொத்தமாக 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சர்வதேச முன்பதிவுகள் ஏறக்குறைய 18 சதவீதம் முதல் 22 சதவீதம் வரையும், உள்ளூர் பயணத்திற்கான முன்பதிவுகள் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையும் குறைந்துள்ளது. அதேபோல் உள்ளூர் பயணத்திற்கான டிக்கெட் கட்டணமும் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்திற்கான கட்டணம் 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவுகள்…

இன்று சர்வதேச யோகா தினம்

இன்று சர்வதேச யோகா தினம்

இன்று சர்வதேச யோகா தினம் அனுட்டிக்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா மேற்கொண்ட முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை (ஜூன் 21) யோகா தினமாக அறிவித்தது. இந்த நாள் உலகம் முழுவதும் இன்று அனுட்டிப்படுகிறது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கொழும்பு அறிவுத்திருக்கோவில், யாழ்ப்பாணம் அறிவுத் திருக்கோவில் ஆகியன இந்த நாளுக்கான நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. கொழும்பு அறிவித்திருக்கோவிலில் காலை 8.30 இற்கு யோகா தின நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் காலை நடைபெற்றன. நாடு முழுவதிலுமுள்ள (ஒன்பது மாகாணங்களிலும்) 113 ஆயுள்வேத மருத்துவமனைகளில் நிகழ்ச்சிகள் காலை 8.30 முதல் 9.30 வரை நடைபெற்றன. சுகாதார அமைச்சின் ஆயுள்வேத மருத்துவப் பிரிவு சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன…

யாழ் மாவட்ட நிரந்தர அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்

யாழ் மாவட்ட நிரந்தர அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. ம.பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு

வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை முதலீட்டு சபையின் முன்னேற்ற மீளாய்வின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், 2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில், உள்நாட்டு முதலீடுகள் 21 மில்லியன் டொலர்களாலும், ஏற்றுமதி வருமானம் 176 மில்லியன் டொலர்களாலும் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இது வரை, இலங்கைக்கு 4669 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளுக்கான யோசனைகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் முதலீட்டு சபையின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள்…

முதலாவது இன்னிங்ஸை நிறைவுசெய்தது இலங்கை அணி

முதலாவது இன்னிங்ஸை நிறைவுசெய்தது இலங்கை அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 485 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Pathum Nissanka அதிகபடியாக 187 ஓட்டங்களையும், Kamindu Mendis 87 ஓட்டங்களையும், Dinesh Chandimal 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் பங்காளாதேஷ் அணி சார்பில் Nayeem Hasan 05 விக்கெட்டுக்களையும், Hasan Mahmud 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். முன்னதாக பங்காளாதேஷ் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 495 ஓட்டங்களை பெற்றது. இதன்படி 10 ஓட்டங்கள் முன்னிலையில் பங்காளாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடவுள்ளது.