Blog

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை!

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை!

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை! எங்களுக்கே உண்டு என்று சொல்வதைப்போல அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். எதிரணி உறுப்பினர் ஹேக்டர் அப்புபுஹாமி எழுப்பிய ஒரு கேள்விக்கு அமைச்சர் தமிழில் பதில் அளித்திருக்கிறார். அதனைக் கேட்டு உரைபெயர்ப்பாளர் எப்படி பெயர்த்தாரோ தெரியவில்லை, தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றும் பதிலை சபையில் சமர்ப்பியுங்கள் நான் பெற்றுக்கொள்கிறேன் என்றும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார். இந்த நேரத்தில்தான் சற்றுக் குழப்பம். அமைச்சர் தமிழில் சொன்ன விளக்கம், உரை பெயர்த்தவருக்குப் புரியவில்லையா, அல்லது அமைச்சர் தனது தனித்துவத் தமிழில் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமற்போனதா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இங்கு ஒரு விடயத்தைச் சொல்லியாக வேண்டும். அமைச்சர் சொல்கிறார் எனது தாய்மொழி தமிழ். நான் தமிழில்தான் பதில் அளிப்பேன் என்று. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. மொழி என்பது…

எதிர்க் கட்சி தமிழைக் கொச்சைப்படுத்துகிறது

பென்சனுக்கு ஆப்புவைக்கும் சட்டமூலம் விரைவில்

எதிர்க் கட்சி தமிழைக் கொச்சைப்படுத்துகிறது என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் மொழியைக் கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்தார. அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு, ‘எனது தாய் மொழி தமிழ். அந்த மொழியிலேயே நான் பதிலளித்தேன். கேட்கப்பட்ட கேள்விக்குத் தெளிவாக விளக்கமளித்தேன். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தமிழ் மொழியைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். தமிழ் மொழியைக் கொச்சப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ளனர். நானும் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன். ஒருவரின் சிரிப்பு மற்றும் நக்கலை பார்க்கும்போது அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பது தெரியும். தமிழ் மொழியில் பதிலளிக்கும்போது…

நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

அட்டை கடித்ததால் வடிந்த இரத்தத்தைக் கழுவச் சென்றபோது நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹற்றன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் நேற்று தவறி வீழ்ந்த 17 வயது மாணவனைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அரங்கலை கடற்படை சுழியோடிகளின் முயற்சியால் இன்று (09) மதியம் மாணவனின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது ராம் மூர்த்தி தமிழ் மாறன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த மாணவன் சக மாணவர்களுடன், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, நீர்த்தேக்கத்திற்குப் புகைப்படம் எடுக்க சென்றுள்ளார். பின்னர் அவர் அட்டை கடிக்குள்ளானதால் காலில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தத்தைக் கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறியபோது நீர்த்தேக்கதில் விழுந்ததாகவும்…

சிங்கமலை அணைக்கட்டில் வீழ்ந்த மாணவன்

சிங்கமலை அணைக்கட்டில் வீழ்ந்த மாணவன்

சிங்கமலை அணைக்கட்டில் வீழ்ந்த மாணவன் காணாமற்போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது மாணவனே இவ்வாறு அணையில் தவறி வீழ்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

செம்மணி விவகாரத்திற்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும்

செம்மணி விவகாரத்திற்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும்

செம்மணி விவகாரத்திற்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வீ. எஸ். இராதாகிருஷ்ணன் இன்று பாராளுமன்றத்தில் கேரிககை விடுத்தார். செம்மணி விவகாரம் சர்வதேசம் வரை சென்றுள்ளது. ஆனால், உள்நாட்டில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இந்த விடயத்தில் கடந்த கால அரசாங்கம் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடப்பு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அந்தப் பகுதி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது. எனவே, இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

ஏன்னை ஏன்டா கூட்டிட்டுப் போகல?

ஏன்னை ஏன்டா கூட்டிட்டுப் போகல?

கல்விச் சுற்றுலாவுக்கு ஏன்னை ஏன்டா கூட்டிட்டுப் போகல? என்று கேட்டுப் பாடசாலை மாணவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா – பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் தன்னை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லாமை மன ரீதியாகப் பாதிப்படையச்செய்வதாகத் தெரிவித்து வலய கல்வி அலுவலகம் முன்பாக சாத்வீக போராட்டத்தை மேற்கொண்டார். இந்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளார். மேலும், பெற்றோரின் சம்மதக் கடிதமும் வழங்கியிருக்கிறார். எனினும், மாணவனை மட்டும் சுற்றுலலாவுக்கு அழைத்துச் செல்லாமல் விட்டுச் சென்றதால், அவர் ஆத்திரமுற்று கல்வி அலுவலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

வத்துகாமம் பஸ் விபத்தில் எண்மர் காயம்

வத்துகாமம் பஸ் விபத்தில் எண்மர் காயம்

வத்துகாமம் பஸ் விபத்தில் எண்மர் காயம் அடைந்து வத்தேகம மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கண்டி வத்துகாமம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துக்கு சொத்தமான பஸ் ஒன்று இன்று காலை 10.45 அளவில் விபத்துக்குள்ளானது. வத்துகாமத்திலிருந்து இருந்து கண்டி நோக்கிச் சென்ற பஸ் “அரலிய உயன”பகுதியில் விபத்துக்குள்ளானதில் எண்மர் சிறு காயங்களுக்குளாகிய நிலையில் வத்துகாமம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தின் போது பஸ்சில் 15 பேர் பயணித்துள்ளனர். விபத்துக்கான விசாரணைகளை வத்துகாமம் பொலிசார் முன்னெத்து வருகின்றனர் .

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக:குழு அதிகாரிகள் இன்று காலை முன்னாள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவருக்கு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்க மறியல் வழங்கி உத்தரவிட்டது.

முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய்

முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய்

முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயைத் தெரிவு செய்து செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை, பனைவூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், இன்று (04) தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி அல்லது மதுரையில் 2ஆவது மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதமடு அன்னையின் ஆடித்திருவிழா நிறைவு

மருதமடு அன்னையின் ஆடித்திருவிழா நிறைவு

மருதமடு அன்னையின் திருச்சொருப ஆசீருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா இன்று நிறைவடைந்திருக்கிறது. திருவிழாத் திருப்பலி காலை 6.15 இற்குத் தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், குருநாகல் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஹெரல்ட் அன்ரனி பெரேரா, ஒய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் திருவிழாத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்கள். திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது. திருச்சொரூப பவனியின் நிறைவில் பக்த அடியார்களுக்கு மடு அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டுத் திருவிழா நிறைவடைந்தது. மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆடித்திருவிழா கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜோசப் பெர்னாண்டோ, மன்னார்