Blog

தூத்துக்குடி-கொழும்பு சரக்குக் கப்பல்

தூத்துக்குடி-கொழும்பு சரக்குக் கப்பல்

தூத்துக்குடி-கொழும்பு சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு தினசரி சரக்கு படகு போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்ல சுமாா் 25 படகுகள் இயக்கப்படுகின்றன. இதில், சுமாா் 250 முதல் 400 டன்களுக்கு மேல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் படகுகள் உள்ளன. இந்த பாரம்பரிய படகு தொழிலை நம்பி தூத்துக்குடியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனா். தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் படகு மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருள்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன. பொதுவாக படகு போக்குவரத்து கடல் வானிலையைக்…

மே மாத அஸ்வெசும இன்று

மே மாத அஸ்வெசும இன்று

மே மாத அஸ்வெசும இன்று: மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது. அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளின் மூலம் மே மாதத்துக்கான கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என, நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் குடியரசு நாள் இன்று

இலங்கையின் குடியரசு நாள் இன்று

இலங்கையின் குடியரசு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரித்தானியாவிடமிருந்து இலங்கை முழுமையான சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1815ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரித்தானிய பேரரசுடன் இணைக்கப்பட்டு, நாட்டின் இறையாண்மை பிரித்தானியர்களிடம் மாற்றப்பட்டது. அதன்பின், பிரித்தானிய மன்னரால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் நாடு ஆளப்பட்டது. இந்நிலையில், 1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி, இலங்கை சோல்பரி அரசியலமைப்பிலிருந்து விடுபட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கியது. 1972இல், அப்போதைய ஶ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்திலிருந்து நீக்கி, மே 22ஆம் திகதி சுதந்திர குடியரசாகப் பிரகடனப்படுத்தியது. அதன்படி, பிரித்தானிய காலனியாக இருந்த இலங்கை முழு சுதந்திரம் பெற்ற இந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுவதுடன், இது நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

வடக்கில் மே 29இல் போராட்டம்

வடக்கில் மே 29இல் போராட்டம்

வடக்கில் மே 29இல் போராட்டம் வெடிக்கும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். வட பகுதி மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க மே 28 வரை காலக்கெடு கொடுத்துள்ள சுமந்திரன், தவறினால் 29ஆம் திகதி பாரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று மாலை ஊடகச் சந்திப்பை நடத்தி அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால், வடக்கில் மே 29இல் போராட்டம் ஆரம்பமாகும். அந்தப் போராட்டம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு முன்னெடுக்கப்படும். வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டும், பல தடைவைகள் இடம்பெயர்ந்த…

மின்சாரக் கட்டணம் 18.3வீதம் அதிகரிக்கும்

மின்சாரக் கட்டணம் 18.3வீதம் அதிகரிக்கும்

மின்சாரக் கட்டணம் 18.3வீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்கு 18.3 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை அனுமதி கோரியிருக்கின்றது. எனினும், பொது மக்களின் கருத்தை அறிந்து ஜூன் முதல் வாரத்தில் தனது பதிலை அளிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவனொளிபாத மலை யாத்திரை நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை நிறைவு: சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலை உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக மாவட்ட பௌத்த விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி வணக்கத்திற்குரிய மொரஹேல சுகதஜோதி தேரர் தெரிவித்துள்ளார். சிவனொளிபாத மலை யாத்திரை காலம் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடங்கியது.

பஸ் விபத்தில் 21பேர் உயிரிழப்பு

பஸ் விபத்தில் 21பேர் உயிரிழப்பு

பஸ் விபத்தில் 21பேர் உயிரிழப்பு: கொத்மலை ரம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்து குறித்து சபாநாயகர் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தநிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 5 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் உள்ளடங்குவதாகவும், பஸ் சாரதியும் விபத்தில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த பஸ்ஸில் சுமார்…

ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி

ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி

ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு முத்தேர் திருவிழா மேளதாள இசை முழங்க, பக்த அடியார்களின் அரோகரா பக்தி பரவசத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேர் பவனி ஆலயத்தில் நடைபெற்ற திரவிய அபிசேகம் வசந்த மண்டப பூஜை உள் வீதி உலா வருதல் ஆகியன இடம்பெற்று தேர் திருவிழா ஆரம்பமானது. இந்தத் தேர் பவனி ஹட்டன் மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் திரும்பி ஹட்டன் புறநகர் வழியாக எம்.ஆர்.டவுன் வரை சென்று பிரதான வீதியூடாக இன்று ஆலயத்தினை வந்தடைந்தது. கடந்த 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான சித்திரா பௌரணமி தேர் திருவிழா, நேற்று முன்தினம் கங்கை நீர்…

சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு

சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு

சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு: கொட்டாஞ்சேனை மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர் என். சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார். தனக்கும் மாணவியின் தற்கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டுத் தம் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவும் சிவானந்த ராஜா தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரசாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, அவர் உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தா தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.…

கொட்டாஞ்சேனை ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை: கொட்டாஞ்செனையில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய, கொழும்பு பம்பலப்பிட்டி ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். மாணவியைத் துஷ்பிரயோம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த ஆசிரியர் கட்டாய லீவில் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி கொழும்புவில் நேற்று பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.