Blog

கெஹலியவின் மகளுக்கு நீதிமன்றம் பிணை

கெஹலியவின் மகளுக்கு நீதிமன்றம் பிணை

கெஹலியவின் மகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (20) விடுவிக்கப்பட்டார். நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான போது கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் நேற்றைய தினம் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்ட போது பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமையின் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல் – வடகொரியா

கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்

ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ என்று வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில் வெளியிட்டுள்ளது. ‘ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். மேற்கு ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் எழுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், இது “மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க…

சண்டை முற்றினால் இலங்கையர்களை மீட்போம்

சண்டை முற்றினால் இலங்கையர்களை மீட்போம்

இஸ்ரேல் – ஈரான் சண்டை முற்றினால் இலங்கையர்களை மீட்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர், வர்த்தக நோக்கத்திற்காகச் சென்ற இருவர் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலில் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், இலங்கையர்கள் இருவர் நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. எனினும், அவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இஸ்ரேல் – போர் நிலைமை பற்றி அமைச்சர் ஹேரத் பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். இஸ்ரேலில் இலங்கையர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். ஈரானில் 35பேர் உள்ளனர். போர் தீவிரமடைந்தால், அண்டை நாட்டு விமானங்களை அனுப்பி அவர்களை அழைத்து வருவதாக அமைச்சர் கூறினார். இதுபற்றிச் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தி இருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.

பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா

பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா

பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவான இவர், பதவியேற்ற ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரதேச சபைத் தலைவர் டி. ரஞ்சித் உதயகுமார தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது வெற்றிடத்திற்குத் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவும் தலைவராகவும் ஆரியதாச கம எத்திகே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராவார்.

கெஹலிய இறக்கியது மருந்தே அல்ல

கெஹலிய இறக்கியது மருந்தே அல்ல

கெஹலிய இறக்கியது மருந்தே அல்ல என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. சர்ச்சைக்குரிய ‘தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி’ (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, உலக சுகாதார அமைப்புடன் இணைந்த ஜெர்மன் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு

ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு

ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஈரானில் இருந்து பேருந்துகள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு விமானம் வியாழக்கிழமையன்று (ஜூன் 19) அதிகாலை டெல்லி வந்தடைந்தது. மாணவர்களைக் கண்டதும் அவர்களின் பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சுடனும் கண்ணீருடனும் வரவேற்றனர். மீட்கப்பட்டவர்களில் 90 மாணவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் உள்ள மற்ற மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த ஒரு வாரமாக இஸ்‌ரேல், ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய…

நுவரெலியா பிரதேச சபையில் இதொகா ஆட்சி

நுவரெலியா பிரதேச சபையில் இதொகா ஆட்சி

நுவரெலியா பிரதேச சபையில் இதொகா ஆட்சி அமைத்துள்ளது. நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு 18.06.2025 அன்று காலை 12 மணியளவில் நுவரெலியா பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் வேலு யோகராஜ், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹேவகே ஆஷா தில்ருக்ஷி பொன்சேகா சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நுவரெலியா பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிஸ் சார்பாக வேலு யோகராஜின் பெயர் முன்மொழியப்பட்டது, அதனையடுத்து, இரண்டாவது நபரின் பெயர் முன்மொழியப்படாததனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் பதவியேற்றார்

இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் பதவியேற்றார்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் ‌கே.ஏ.ஆர்.இந்திரஜித் கட்டுக்கம்பளை 18 ஆம் திகதி புதன்கிழமை இன்று தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக ஏற்றார். இரத்தினபுரி மாநகர சபையிலுள்ள முதல்வரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் இதற்கு முன்னதாக இதுவரை காலமும் நகரசபைக்கும் அதன் நிர்வாக ‌நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்த‌ மாநகர சபை‌ ஆணையாளரிடமிருந்து‌ அதற்குரிய சாவியை உத்தியோகபூர்வ புதிய முதல்வர் இந்திரஜித் பெற்றுக் கொண்டார் இந்நிகழ்வில் சர்வ மதகுருமார்களும் நகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நடிகர் மோகன்லால் பாராளுமன்றம் வருகை

நடிகர் மோகன்லால் பாராளுமன்றம் வருகை

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கை வந்துள்ள நடிகர் மோகன்லால் நேற்று (19) பாராளுமன்றம் வருகை தந்தார். பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு அமைய வருகை தந்த, பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகரின் கலரியில் இருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டனர். இந்த விஜயத்தின் போது, ​​அவர் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இதன்போது கலந்துகொண்டார்

பன்விலை பிரதேச சபையைக் கோட்டைவிட்ட தமிழ் உறுப்பினர்கள்

நுவரெலியா பிரதேச சபையில் இதொகா ஆட்சி

கண்டி மாவட்டம் பன்விலை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. வியாழக்கிழமை இடம் பெற்ற சபை ஒன்று கூடலில் மேலதிக இரண்டு ஆசனங்களால் பன்விலை பிரதேச சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது.மொத்தமாக 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சர்வஜன பலய (1 ஆசனம்) பொது ஜன ஐக்கிய முன்னணி (1 ஆசனம்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (1 ஆசனம் ) ஆகிய கட்சிகள் வாக்களித்தன இதன்போது 9 ஆசனங்களோடு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 19 வருடங்களின் பின்னர் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றிக்கொண்டது.5 ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ( 2 ஆசனங்கள்)…