Blog

அரச வேலைவாய்ப்பில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும்

அரச வேலைவாய்ப்பில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும்

62ஆயிரம் அரச வேலைவாய்ப்பில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சுதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். அரச நிறுவனங்களில் சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நியமன அனுமதியை அமைச்சரவையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா பெற்றிருக்கின்றார். இந்த நியமன அனுமதி நுவரெலியா மாவட்டத்திற்கும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளுக்கும் எந்த அளவு பக்க பலமாக அமையப் போகிறது என்பது எதிர்கால நடவடிக்கையைப் பொறுத்தே பார்க்க முடியும் என்று சச்சுதானந்தன் கூறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களது காலப்பகுதியின் ஆசிரியர் நியமனங்கள், அரச ஊழியர்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. மத்திய மாகாண முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் காலப்பகுதியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் கிடைத்தன. இறுதியாக தனது பாராளுமன்ற காலப்பகுதியிலும் மலையகத்துக்கான 740 பட்டதாரி…

நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் பாதுகாப்பு இரும்பு வேலி தேவை

நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு இரும்பு வேலி தேவை.

நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு இரும்பு வேலி தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதி கடந்த வருடம் காபட் இடப்பட்டது. அவ்வாறு காபட் இடப்பட்டு செப்பனிட பட்ட பிரதான வீதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக லக்சபான பகுதியில் வளைவுகளில் பாரிய பள்ளத்தாக்கு உள்ளது அத்துடன் ஒரு சில பகுதிகளில் மவுஸ்சாகலை நீர் தேக்க கரையோர பகுதிகளாகும் எதிர் வரும் டிசம்பர் மாதத்தில் சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பித்தவுடன் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்லும் சாலையானதால் இரும்பினால் செய்யப்பட்ட நிறந்தர பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். இதற்கான பணிகளை நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்குப் பாராட்டு

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்குப் பாராட்டு

புற்றுநோயால் அவதிப்பட்ட சக ஊழியருக்காகத் தம் நண்பர்களுடன் சேர்ந்து சமைத்துக் கொடுப்பது முதல் அவரைக் கழிவறைக்கு அழைத்துச் செல்வது வரை பல்வேறு உதவிகளைச் செய்தார் வெளிநாட்டு ஊழியர் தங்கம் கார்த்திக். உயிரைக் காக்கும் திறன் அனைத்து ஊழியர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதால் ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனம் ஏற்பாடுசெய்த முதலுதவி/சிபிஆர் பயிலரங்கில் 249 ஊழியர்கள் பங்கேற்க அவர் ஊக்குவித்தார். இவ்வாறு பல்வேறு வழிகளில் சக ஊழியர்க்கு உதவிய திரு கார்த்திக் உட்பட அறுவருக்கு ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனத்தின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் அதிபர் தர்மன் சண்முகரத்னம். காணாமற்போனவரைக் கண்டுபிடிக்க உதவிய திரு பாண்டியன் செல்வமுருகன்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சக ஊழியரின் குடும்பத்துக்கு உதவிய திரு ஹசான் காலித்; மோசடிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய திரு பள்ளிகொண்டபெருமாள் ஜெயசேகர்; வெளிநாட்டு ஊழியர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுக்கும் திரு ராசல் ஆகியோர் விருது பெற்ற ஏனையோர்.…

பாராட்டு விழாவும் சின்னம் சூட்டுவிழாவும்

பாராட்டு விழாவும் சின்னம் சூட்டுவிழாவும்

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் வத்தேகம கல்வி வலயத்தில் பன்விலை கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள பெருந்தோட்ட பாடசாலையான ஆத்தளை தமிழ் வித்தியாலய பாடசாலை வரலாற்றிலே முதன் முறையாக இவ்வாண்டு தமிழ்மொழித்தின போட்டிகளில் வலய மற்றும் மாகாண போட்டிகளில் முதலிடம் பெற்று தேசிய மட்ட கவிதை ஆக்கப் போட்டிக்கு தெரிவாகியுள்ள செல்வி P.கனிஷ்காவிற்கான பாராட்டு விழாவும் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழாவும் அதிபர் திருமதி S.செல்வகுமாரி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வத்தேகம வலய கல்வி பணிமனையின் முன்னால் மேலதிக கல்விப்பணிப்பாளர் I. ஹாசிம் , அவர்களும் சிறப்பு அதிதியாக வத்தேகம வலய கல்வி பணிமனையின் உதவி கல்விப் பணிப்பாளர் திரு A. ரஹிம், ஆசிரிய ஆலோசகர் திருமதி K.கோபாலகிருஸ்ணன் மற்றும் நலன்விரும்பிகளான பன்விலை பிரதேச தொழிலதிபர் Y. பிரபாகரன், பன்விலை பிரதேச தொழிலதிபர் காமினி…

கார்ட்மோர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி

கார்ட்மோர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி

மஸ்கெலியா – கார்ட்மோர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியை அடுத்த ஆண்டுக்குள் சுற்றுலாத் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். கார்ட்மோர் நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இத்தகைய பகுதிகளை உருவாக்குவதன் மூலம், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பல்வேறு நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இந்தப் பகுதியை சுற்றுலாத் தளமாக உருவாக்க எதிர்பார்க்கப்படடுள்ளது. இந்த பகுதிக்கு தற்போது பல சுற்றுலாப் பயணிகள் வந்த சென்றாலும், அவர்களுக்கு தேவையான வசதிகள் அங்கு இல்லை. அங்கு உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இடங்களையும் நிர்மாணிக்க முடியும். இதுபோன்ற நவீன வசதிகளை இங்கு உருவாக்குவதற்கு அடுத்த பாதீட்டிலிருந்து நிதி ஒதுக்குவோம். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வீதியை…

நுவரெலியா போலீஸ் நிலையத்தின் அரையாண்டு ஆய்வு

நுவரெலியா போலீஸ் நிலையத்தின் அரையாண்டு ஆய்வு

நுவரெலியா போலீஸ் நிலையத்தின் அரையாண்டு ஆய்வு நுவரெலியா சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளரின் தலைமையில் நடத்தப்பட்டது. வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் நுவரெலியா காவல்துறையின் அரையாண்டு ஆய்வு அண்மையில் நுவரெலியா நகராட்சி மன்ற மைதானத்தில் நுவரெலியா சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அனுருத்த பண்டார ஹக்மான தலைமையில் நடைபெற்றது. இந்த அரையாண்டு ஆய்வு நுவரெலியா தலைமையக தலைமை காவல் ஆய்வாளர் திரு. பிரேமலால் கெட்டியாராச்சி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நுவரெலியா காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பிரிவுகளின் தலைவர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் மேற்பார்வையிடப்பட்டனர். இதன் பின்னர் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அனுருத்த பண்டார ஹக்மானவும் காவல் நிலையத்திற்குள் மேற்பார்வை நடவடிக்கைகளில் பங்கேற்றார்.

மலைநாட்டில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்

மலைநாட்டில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்

மலைநாட்டில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. தபால் நிலைங்கள் மூடப்பட்டுள்ளன. புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல் உள்ளிட்ட பல அவசர பிரச்சினைகள் தொடர்பாக கடந்த (18) முதல் நடைபெறும் நாடளாவிய அஞ்சல் சேவைகள் வேலைநிறுத்தத்துடன் இணைந்து நுவரெலியா வரலாற்று சிறப்புமிக்க தபால் அலுவலகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. காலையில் எந்த தபால் ஊழியரும் வேலைக்கு வரவில்லை, காலையில் தபால் அலுவலகம் மற்றும் தபால் அறை மூடப்பட்டிருந்தது. தபால் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து தபால் அலுவலக கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததையும் கவனிக்க முடிந்தது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நுவரெலியா வரலாற்று சிறப்புமிக்க தபால் அலுவலகம் மூடப்பட்டதால், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் பல சுற்றுலா சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வீட்டு நாயை வேட்டையாடும் காட்டுச்சிறுத்தைகள்

வீட்டு நாயை வேட்டையாடும் காட்டுச்சிறுத்தைகள்

வீட்டு நாயை வேட்டையாடும் காட்டுச்சிறுத்தைகள் மக்களுக்குக் கடும் துன்பத்தைத் தருவதாக கினிகத்தேனைப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியுள்ளதாகவும், தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களில் ஒன்றை, சிறுத்தை இழுத்துச் செல்வது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தைகளின் நடமாட்டம் தோட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளதன் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, நாய்களை வேட்டையாடும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதேவேளை, நாயொன்றை வேட்டையாடுவதற்கு வந்த சிறுத்தைக் குட்டியொன்று பொறியில் சிக்கியதாக நோர்வூட்…

திருப்பழுகாமம் சிவன் ஆலயத்தில் சங்காபிஷேகமும் பாற்குடபவனியும்

திருப்பழுகாமம் கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வரநாதர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் இன்றைய தினம்(20) சிறப்பாக இடம்பெற்றது. பாற்குடபவனியானது திருப்பழுகாமம் ஏரிக்கரைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக சிவன் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்

தமிழர்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு

தமிழர்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு

தமிழர்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை நேற்று 19ஆம் திகதி பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பில் அமைந்துள்ள வெஸ்ட் மின்ஸ்ரர் ஹவுசில் பிராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்து உரையாடினார். இதன் போது வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள்எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் , அரசியல் கைதிகள், செம்மணி, காணிப்பிரச்சனைகள், இராணுவத் தலையீடு தொடர்பிலும், நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதனுடன் அரசின் வட கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.