தமிழ்த் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் ஒன்பது அறிவிக்கப்பட்டுள்ளன.
2024 – ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில் 9 விருதுகளை தமிழ்த் திரைப்படங்கள் வென்றுள்ளன.
இந்திய திரையுலகின் உயரிய விருதான தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இதில் தமிழ்த் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் 9 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன் 3, விஜய் சேதுபதியின் மகாராஜா 2, தனுஷின் கேப்டன் மில்லர் 2, மெய்யழகன் 1, ராயன் 1 என மொத்தம் 9 தேசிய விருதுகளை வென்றுள்ளன.
இவை தவிர தமிழ் ஆவணப் படமான ப்ளு படமும் விருது ஒன்றை வென்றுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: ஏலகிரி மலையக மக்கள் வாழ்க்கை படமாகிறது
சிறந்த இயக்குநருக்கான விருது ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த படத்தொகுப்புக்கான விருது ஆர். கலைவண்ணனுக்கு கிடைத்துள்ளது.
எல்லாமாகத் தமிழ்த் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் ஒன்பது கிடைத்துள்ள விவரம் வருமாறு:
அமரன்
- சிறந்த படத்தொகுப்பு( ஆர். கலைவண்ணன்) சிறந்த இயக்குநர்(ராஜ்குமார் பெரியசாமி)
- சிறந்த பின்னணி இசை (ஜிவி பிரகாஷ் குமார்)
மகாராஜா
சிறந்த சண்டைப் பயிற்சி( அனல் அரசு)
- சிறந்த துணை நடிகை( சச்சனா நாமிதாஸ்)
கேப்டன் மில்லர்
சிறந்த நடிகர்(சிறப்பு பிரிவு)( தனுஷ்)
- சிறந்த சமூக அக்கறை
மெய்யழகன்
- சிறந்த ஒலிப்பதிவு ( சுரேன் ஜி)
ராயன்
சிறந்த தமிழ்ப் படம்
தமிழ் ஆவணப் படம்(ப்ளு)
சிறந்த சவுண்ட் டிசைனர்( டிஎஸ் ஹரிஹர சுதன்)
