கொட்டகலை பிரதேச சபையின் சுகாதார ஊழியர்கள் கௌரவிப்பு விழா, சபை கூட்ட மண்டபத்தில் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதார, நீர்,வீதி ஊழியர்கள், சாரதிகள், காவலாளிகள்,மேற்பார்வையாளர் போன்றோர் தலைவர்,உறுப்பினர்களால் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



இந்நிகழ்வைத் தொடர்ந்து விஜயதசமி தினத்தையொட்டி கொட்டகலை பிரதேச சபை உத்தியோகத்தர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்நிகழ்ச்சிகள் பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில், உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி உட்பட உறுப்பினர்களான நந்தகோபால் பாஸ்கரன், கணபதி கண்ணதாசன், சுந்தரராஜ் சுரேஷ்,பொன்னையா இரவிச்சந்திரன்,விஜயசீலன் சுதர்சன்,கோவிந்தராஜ் நேசமலர்,ராமதாஸ் சாந்தினி,ரசிக்கா ஜீவனி,செயலாளர் சிவராம் ராஜவீரன்,உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றன.
