மலைப் பகுதி ரயில் சேவையில் அடிக்கடி தடங்கல் ஏற்படுவது குறித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் ஆய்வுகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் இதுவரை இரண்டு தடவை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
எனவே, எதிர்காலத்திலும் அவ்வாறு ஏற்படுமா, அதற்கு நிரந்தரத் தீர்வைக் காண்பது எவ்வாறு? என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த தித்துவா புயலால் ஏற்பட்ட தாக்கத்தினால், தற்போதைய மழை நிலைமையில் மீண்டும்பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.
