மலையகத் தமிழ் மக்களை சாதி,தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபருக்கு எதிராக “S3-ICCPR” சட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பொலிஸ் புகார் அளித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மலையகத் தமிழ் மக்களை சாதி,தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தும் வகையில், அண்மையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட தனிநபருக்கு எதிராக, “S3-ICCPR” சட்டத்தின் கீழ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (02) பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் மாஅதிபரின் “Tell IGP – Sri Lanka Police” முறைப்பாட்டு இணையத்தளத்தின் ஊடாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜீவன் தொண்டமான் அளித்த முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதற்கான குறிப்பு இலக்கத்தையும் (Reference Number) அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பதிவின் screenshot-ஐ தான் ஆதாரமாகப் பாதுகாத்து வைத்துள்ளதாகவும் அந்த Facebook பதிவின் அசல் URL,சம்பந்தப்பட்ட Facebook சுயவிவரத்தின் விபரங்களையும் தேவையான ஆதாரங்களாக வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, Facebook பதிவை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி, நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ், குற்றம் இடம்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டால், சட்டத்திற்கு அமைவாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகப்பிரிவு
(ஜீவன் தொண்டமான் பா.உ)
