கண்டி, பன்விலை, மடுல்கலை நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்ச்சி இன்று (01) பாடசாலை அதிபர் எம். நவநீதன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக தேசமான்ய கலாநிதி (திருமதி) சந்திரவதனா இரத்தினராஜா, குருக்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.



சிறப்பு அதிதிகளாக தேசமான்ய சேவாபூஷண தர்மதூத லயன் சில்மியா சஹாப்தீன், கவிஞரும் எழுத்தாளருமான புசல்லாவை இஸ்மாலிகா விஸ்வநாதராஜா, பின்தென்னை பிளாண்டேஷன் நிறுவனத்தின் முகாமையாளர் இந்திக கத்திரியாராச்சி, பத்திரிகையாளர் கண்டி இரா. அ. இராமன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.



மாணவர்களின் திறமைகள், மகிழ்ச்சி,படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


