கிட்டினன் கலைச்செல்வி எம்பி மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனைக்குத் திடீர் விஜயம்

கிட்டினன் கலைச்செல்வி எம்பி மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனைக்குத் திடீர் விஜயம்

மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன கலைசெல்வி வைத்திய சாலையில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஷாபிக் பாஹிமா மற்றும் வைத்திய சாலையில் உள்ள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த சில மாதங்களாக பாரந் தூக்கி இயங்காமை, ரசாயன கூட அதிகாரி இல்லாமை,சிற்றூழியர் பற்றாக்குறை, தாதியர் பற்றாக்குறை, வைத்தியர் பற்றாக்குறை, திடீர் மரணம் மரணம் மரணம் பரிசோதனை, வைத்திய சாலைக்கு சுற்றி உள்ள பகுதிகளில் இரவு வேளையில் மின் வெளிச்சம் பொறுத்தல், வைத்திய சாலைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீதி செப்பனிடல் போன்ற பல்வேறு குறைபாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்றம் உறுப்பினர் பாரந்தூக்கி சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் உடன் கலந்துரையாடி பாரந்தூக்ககிக்கான மின் இணைப்பு சீர் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

மஸ்கெலியா நிருபர்

Author

Related posts