கண்டி – பன்விலை செல்வ விநாயகர் சதுர்த்தி விழா எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறுகிறது.
கண்டி பன்விலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருடாந்த விநாயக சதுர்த்திப் பெருவிழா 27.08.2025 புதன்கிழமை விமரிசையாக நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலை.05.30 அளவில் விக்னேஸ்வர வழிபாடு மகா சங்கல்பம் புண்ணியாகவாஜனம் என்பன நடைபெறும்.
கணபதி ஓமம், கும்ப பூஜை விநாயகப் பெருமானுக்கு திரவிய அபிஷேகம் கும்ப திருவீதி பிரசன்னம் ஆகியனவும் நடைபெறும்.
தொடர்ந்து அபிஷேகம் அலங்கார பூஜைகளோடு அடியார்களுக்கு திருவருள் பிரசாதம் வழங்கப்படும்.
அன்று பிற்பகல்.03 மணி அளவில் வசந்த மண்டப அலங்கார பூஜை செல்வ விநாயகப் பெருமான் உள்வீதி பவனி ஆகியன இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானின் திரு உருவம் புனித நதியில் கரைத்தல் வைபவம் நடைபெறும்( விசர் ஜனசாந்தி விழா )
விக்னேஸ்வர மெய்யடியார்கள் ஆச்சார சீலர்களாக கலந்து சிறப்பித்து எல்லாம் வல்ல செல்வ விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சபையினர் பொதுமக்களைக் கேடட்டுக்கொள்கின்றனர்.
( ஆலய பிரதமர் குரு சிவ உபாசகர் சத்தியோ ஜாத ஸ்வச்சாரியார் சிவஸ்ரீ. அ. ஸ்ரீ முருகானந்த குருக்கள்)
பன்விலை நிருபர் ம.நவநீதன்