சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவர்களின் சிபாரிசுக்கு அமைய அவரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகரிப்பு காரணமாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரு. ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் எந்நேரமும் மிகுந்த அவதானிப்புடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.