இந்தியாவில் ஆபிரிக்க மாணவர் அடித்துக்கொலை

இந்தியாவில் ஆபிரிக்க மாணவர் அடித்துக்கொலை

இந்தியாவில் ஆபிரிக்க மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

பத்திண்டா: ஆப்பிரிக்க மாணவர் ஒருவர் இந்தியாவில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

ஸிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஸிவெயா லீரோய், 22, பஞ்சாப் மாநிலம், தல்வண்டி சாபோவிலுள்ள குரு காஷி பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்தார்.

அவர் இம்மாதம் 13ஆம் தேதி, அப்பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர் தில்பிரீத் சிங் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

அதனையடுத்து, பத்திண்டா எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லீரோய், எட்டு நாள்களுக்குப் பிறகு உயிரிழந்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) தெரிவித்தது.

கடந்த 12ஆம் தேதி லீரோயின் காரில் பேஸ்பால் மட்டை இருந்ததை தில்பிரீத் கண்டுபிடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்ததாகவும் காவல்துறை கூறியது.

அதற்கு மறுநாள், தில்பிரீத் வேறு எட்டுப் பேருடன் சேர்ந்து கழிகளால் லீரோயைக் கடுமையாகத் தாக்கினார். இதனால், லீரோய் மோசமாகக் காயமடைந்தார்.

இந்தியாவில் ஆபிரிக்க மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர்மீது கொலைக் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எட்டுப் பேரைக் கைதுசெய்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Author

Related posts