முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயண விவகாரமாகக் கைதுசெய்யப்பட்ட அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரவு வரை நடந்த பிணைக் கோரிக்கை விசாரணையைத் தொடர்ந்து அவருக்குப் பிணை வழங்க நீதவான் மறுத்து விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமையானது முன்னாள் ஜனாதிபதி ஒருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ரணிலின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் மின் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கைதுசெய்த குற்றப் புலனாய்வுத் திணக்கள அதிகாரிகள், அவரை இன்று (22) மாலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் பிணைக் கோரிக்கை மனு பரிசீலனையை அரை மணித்தியாலத்திற்கு நீதவான் ஒத்திவைத்திருந்தார்.
மீண்டும் விசாரணை ஆரம்பமானபோது நீதிமன்றத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டதாக எது செய்தியாளர் தெரிவித்தார்.
அரச நிதியில் வெளிநாடு சென்றமை தொடர்பாக வாக்குமூலம் வழங்க இன்று காலை ஒன்பது மணியளவில் திரு. விக்கிரமசிங்க சிஐடிக்குச் சென்றார்.
அங்க அவரிடம் சுமார் நாலரை மணித்தியாலம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் பிற்பகலில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
நீதிமன்றத்திற்குப் படையெடுத்த அரசியல்வாதிகள்
திரு. ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோது, அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் சமுகமளித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
ரணிலின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் மின் தடங்கல் ஏற்பட்டதால் சற்றுநேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டது.