நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் பாதுகாப்பு இரும்பு வேலி தேவை

நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு இரும்பு வேலி தேவை.

நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு இரும்பு வேலி தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதி கடந்த வருடம் காபட் இடப்பட்டது. அவ்வாறு காபட் இடப்பட்டு செப்பனிட பட்ட பிரதான வீதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக லக்சபான பகுதியில் வளைவுகளில் பாரிய பள்ளத்தாக்கு உள்ளது அத்துடன் ஒரு சில பகுதிகளில் மவுஸ்சாகலை நீர் தேக்க கரையோர பகுதிகளாகும் எதிர் வரும் டிசம்பர் மாதத்தில் சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பித்தவுடன் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்லும் சாலையானதால் இரும்பினால் செய்யப்பட்ட நிறந்தர பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.

இதற்கான பணிகளை நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Author

Related posts