மலைநாட்டில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்

மலைநாட்டில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்

மலைநாட்டில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. தபால் நிலைங்கள் மூடப்பட்டுள்ளன.

புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல் உள்ளிட்ட பல அவசர பிரச்சினைகள் தொடர்பாக கடந்த (18) முதல் நடைபெறும் நாடளாவிய அஞ்சல் சேவைகள் வேலைநிறுத்தத்துடன் இணைந்து நுவரெலியா வரலாற்று சிறப்புமிக்க தபால் அலுவலகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

காலையில் எந்த தபால் ஊழியரும் வேலைக்கு வரவில்லை, காலையில் தபால் அலுவலகம் மற்றும் தபால் அறை மூடப்பட்டிருந்தது.

தபால் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து தபால் அலுவலக கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததையும் கவனிக்க முடிந்தது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நுவரெலியா வரலாற்று சிறப்புமிக்க தபால் அலுவலகம் மூடப்பட்டதால், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் பல சுற்றுலா சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

Author

Related posts