மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் வத்தேகம கல்வி வலயத்தில் பன்விலை கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள பெருந்தோட்ட பாடசாலையான ஆத்தளை தமிழ் வித்தியாலய பாடசாலை வரலாற்றிலே முதன் முறையாக இவ்வாண்டு தமிழ்மொழித்தின போட்டிகளில் வலய மற்றும் மாகாண போட்டிகளில் முதலிடம் பெற்று தேசிய மட்ட கவிதை ஆக்கப் போட்டிக்கு தெரிவாகியுள்ள செல்வி P.கனிஷ்காவிற்கான பாராட்டு விழாவும் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழாவும் அதிபர் திருமதி S.செல்வகுமாரி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வத்தேகம வலய கல்வி பணிமனையின் முன்னால் மேலதிக கல்விப்பணிப்பாளர் I. ஹாசிம் , அவர்களும் சிறப்பு அதிதியாக வத்தேகம வலய கல்வி பணிமனையின் உதவி கல்விப் பணிப்பாளர் திரு A. ரஹிம், ஆசிரிய ஆலோசகர் திருமதி K.கோபாலகிருஸ்ணன் மற்றும் நலன்விரும்பிகளான பன்விலை பிரதேச தொழிலதிபர் Y. பிரபாகரன், பன்விலை பிரதேச தொழிலதிபர் காமினி திசாநாயக்க,மாத்தளை பிரதேச தொழிலதிபர் D.பிரபாகரன், செல்லதுரை கலைமகள், பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
