சுற்றுலா சேவை அடிப்படை பயிற்சி

சுற்றுலா சேவை அடிப்படை பயிற்சி

சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கான ஐந்து நாள் சுற்றுலா சேவை அடிப்படை பயிற்சி மஸ்கெலியா – நல்லதண்ணியில் நடைபெற்றது.

மத்திய மாகாண வர்த்தகம், வணிகம், சுற்றுலாத்துறை ஆகிய பிரிவுகளின் நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் நல்லதண்ணியில் உள்ள துறைசார்ந்தவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது.

சுற்றுலா சேவை வழங்குநர்கள் 96 பேருக்கும் சுற்றுலா போக்குவரத்து வசதியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உதவியாளர்கள்,சுற்றுலா தயாரிப்பாளர்கள், உள்ளூர் வழிகாட்டிகள் ஆகியோருக்கு இந்தப் பயிற்சி நடந்தது.

ஐந்து நாள் அடிப்படைப் பயிற்சியாகக் கடந்த 2025/08/11 முதல் 2025/08/15 வரை வழங்கப்பட்ட இப் பயிற்சி பட்டறை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள வைட் எலிபண்ட் விருந்தினர் விடுதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்குச் சுற்றுலா வசதி வழங்குநர் உரிமங்கள் வழங்கப்படும் என்று பயிற்சி பட்டறை நடத்திய மத்திய மாகாண சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.

பல்வேறு பாடப் பிரிவுகளில் விளக்கம் தந்து மேலும் நடைமுறை அறிவை வழங்கும் பல நிபுணத்துவ பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரால் சுற்றுலா சேவை அடிப்படை பயிற்சி நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சிப் பட்டறைகள் மூலம் அடைய வேண்டிய நோக்கங்கள் சுற்றுலாத் துறையில் ஈடு படுபவர்களுக்குத் தேவையான அறிவை வழங்குதல், சிறந்த மனப்பான்மையை வளர்த்தல், சட்டச் சூழலை உருவாக்குதல், அவர்களின் சுற்றுலா வணிகங்களை முறைபடுத்துதல் போன்றவற்றில் இந்த நபர்களை ஒழுங்கு படுத்துதல்

சுற்றுலா சேவை அடிப்படை பயிற்சி

Author

Related posts