தொடர் மழை காரணமாக லக்சபான நீர் மின் நிலைய பகுதியில் உள்ள நீர் அணையின் வான் கதவு திறப்பு.
நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்தது வருவதால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக லக்சபான நீர் மின் நிலைய பகுதியில் உள்ள நீர் அணையில் இருந்து தற்போது வான் கதவு ஒன்று மூன்று அங்குலம் திறந்து விட பட்டு உள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து அதிக மழை பெய்யும் பட்சத்தில் ஏனைய வான் கதவுகள் திறந்து விட வாய்ப்பு உள்ளது என அவர் மேலும் கூறினார்.