தொடர்ந்து பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் வெள்ளம்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்தது வருகிறது.
இதன் காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
மேலும் கவரவலை கிரகத்தில் உள்ள பல இல்லங்களில் வெள்ள நீர் புகுந்தது உள்ளது.இதன் காரணமாக அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி அம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.