சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ரஷ்யாவிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹவாய், அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதுடன், கடல் அலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பூகம்பத்தின் ஆரம்ப கட்ட அளவின் அடிப்படையில், பரவலான ஆபத்தான சுனாமி அலைகள் சாத்தியமாகும்” என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது.