இலங்கை- மாலைதீவு இருதரப்பு ஒப்பந்தங்கள்

இலங்கை- மாலைதீவு இருதரப்பு ஒப்பந்தங்கள்

இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது முய்சுவுக்கும் இடையிலான சந்திப்புக்குப்பின்னர் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

மாலைதீவு சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

நேற்றுக்காலை மாலைதீவு சென்றடைந்த ஜனாதிபதியை மாலைதீவு ஜனாதிபதி உற்சாகமாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மாலைதீவு ஜனாதிபதி மாளிகையில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.

Author

Related posts