இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்பிரகமுவை, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மேற்கிலிருந்து தென்மேற்கு நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், கற்பிட்டி முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை முதல் வாகரை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை முதல் வாகரை வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Author

Related posts