மீமுறே விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்

மீமுறே விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்

மீமுறே விபத்தில் நால்வர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீமுரே கரம்பகொல்ல பகுதியில் நேற்று (19) மாலை வேன் ஒன்று கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது.

மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய வேன், அதிக வளைவு கொண்ட பிரதான வீதியின் மேல் வளைவிலிருந்து கீழ் வளைவு வரை 30 மீற்றர் கவிழ்ந்து மீண்டும் பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது.

விபத்தில் இறந்தவர்களில் மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் அடங்கின்றனர்.

அதேநேரம், விபத்தில் குழந்தையொன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் வேனில் 6 பேர் இருந்துள்ளதுடன், வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Author

Related posts